Mohamed Farook Mohamed Farook Author
Title: பாட்டி.. ஒரு நன்பர் நேரில் பார்த்த உண்மை சம்பவம்..!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஒரு ஊரில் உள்ள சிறிய உணவகத்தில்..பள்ளி சீருடை அனிந்த ஆறு வயது மதிக்கத்தக்க சின்ன பெண்(கையில் தூக்கு வாளியுடன்): பெண் குழந்தை :- பாட்...
ஒரு ஊரில் உள்ள சிறிய உணவகத்தில்..பள்ளி சீருடை அனிந்த ஆறு வயது மதிக்கத்தக்க சின்ன பெண்(கையில் தூக்கு வாளியுடன்):

பெண் குழந்தை :-
பாட்டி …! அம்மா பத்து இட்லி வாங்கி வர சொன்னாங்க…
காசு நாளைக்கு தராங்களாம்…!

ஹோட்டல் நடத்தும் பாட்டி : –
ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு…. அம்மாக்கிட்டே சொல்லும்மா..இதில உனக்கு… தம்பிக்கு..உன் அம்மாவுக்கு..  எல்லோருக்கும் சேர்த்து ’15 இட்லி வச்சிருக்கேன்
தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்….

(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).

குழந்தை: சரி…அம்மாட்ட சொல்றேன்…போயிட்டு வரேன் பாட்டி …. (குழந்தை கிளம்பிவிட்டாள்)
அந்த கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம் ஆதலால் அந்த
நனபர் மனதில் நினைத்ததை அந்த பாட்டியிடம் கேட்டார்…!

நன்பர் :
நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க பாட்டி ….!

பாட்டி :
அட சாப்பாடுதானே பா ….நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல பா …அதெல்லாம் குடுத்துடுவாங்க…என்ன கொஞ்சம் லேட் ஆகும்….எல்லாருக்கும் பணம் சுலப-மாவா சம்பாதிக்க முடியுது….

நான்: ஏன் பாட்டி அவங்க வீட்டுலயே சமைச்சி சாப்பிடலாம்ல..!

பாட்டி : குழந்தை கேட்டிருக்கும்.. அதான் சார் அனுப்பி இருக்காங்க…
அவங்க கணவர் ‘பக்கவாதம் வந்து வேலைக்கு போகமல் வீட்லதான்
இருக்காரு..! இவங்க அம்மாதான் கூலி வேலைக்கு போவும். சில நேரம்
சாலை ஓரத்தில காய்-கரி வியாபாரம் செய்து கணவர் மற்றும் இரணடு
பிள்ளைகளை காப்பாற்றுது..!.

நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பலப் பா … நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு …வந்துடும் பா …ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்டுதுல்ல அதுதான் பா முக்கியம்….!
 
‘கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது..
இடலி பாட்டிதான் இந்த ஏழைகளின் கடவுள்...

இதை படிப்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இது போன்றவர்களை வாழ்கையில் கடக்க நேரிட்டால் உங்களால் ஆன உதவியை செய்து விட்டு வாருங்கள். சிறிய உதவி என்று எதுவுமே இல்லை. சரியான நேரத்தில் செய்யப்படும் எந்த உதவியும் ஞாலத்தினும் மானப் பெரிது !!

மனிதம் என்னும் சொல்லுக்கான “தாயுள்ளம் இதுவே” இவர் அல்லவோ மக்களுக்கானத் தாய். தன் முதலீட்டில் இலாபம் குறைந்திடினும் இல்லை என பசித்து வரும் மனிதர்க்கு வயிற்றை நிரப்பியதோடு நமக்கும் பாடமாக அடுத்தவரை அன்புடன் நம்பு பணத்திற்காக பகட்டு வணிகம் செய்யாதே.

இந்தத் தாயை நாம் ஆதரித்தால் விவசாயிகளை சாகவிடுவாளா? இல்லை சாராயம் ஊற்றி மயங்கத்தான் விடுவாளா? கேடுகெட்ட ஊடகங்கள் இவரைப்போன்ற தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை மாறாக ஆட்சிக்கட்டிலில் மக்கள் பணத்தில் சொகுசாக மக்கள் தொண்டு எனும் போலி போர்வையில் தும்மினாலும், விம்மினாலம் வெளிச்சம் போட்டு முதன்மை செய்தியாக வெட்கமின்றி வெளியிடுகின்றன காணொளியாய்,அறிவின்மயக்கத்தில்.

இந்த தாயின் பாதம் தொட்டு வணங்க விழைகிறது என் மனம்..!

பாட்டி உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை..  மாமனிதநேயமுள்ள உங்களை பாரட்டாவும் உயர்ந்த வார்த்தை இல்லை.

நட்புடன் உங்கள் நண்பன் .

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top