"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
2/8/16

மதுரை விமானநிலையத்திற்கு, துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, திருச்சி லால்குடியை சேர்ந்த முருகேசன் (32), குறைந்த விலையில் வாங்கிய டிவி கொண்டு வந்திருந்தார் சுங்கத்துறை அதிகாரி ரூ.7 ஆயிரம் கட்டிய பிறகே டிவியை எடுத்துச்செல்ல வேண்டும் என கூறினர்.

மிக குறைந்த விலை டிவி அவ்வளவு பணம் தர இயலாது என முருகேசன் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். தான் வெளிநாட்டில் குறைந்த விலைக்கு வாங்கிய டிவிக்கு மிக அதிகமாக பணம் கட்ட சொன்னதால் மிகவும் விரக்தியடைந்த முருகேசன், டிவியை கீழே போட்டு உடைத்தார். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப் போவதாக தெரிவித்தனர். மேலும் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி அவரை அதிகாரிகள் விடுவித்தனர்.

இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. தொடர்ந்து இது போன்று அதிக வரி விதிப்பால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விமான நிலையத்தில் கடும் பாதிப்புக்குள்ளாவதாக பயணிக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் முருகேஷனின் உடைந்த டிவிக்கு பதிலாக வேறு டிவி வழங்க முகநூல் நண்பர் ஒருவர் முன் வந்துள்ளார். இதனை அவர் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நேற்று ஒரு சகோதரன் வெளிநாட்டில் இருந்து வாங்கிவந்த டிவிக்கு விமானநிலைய அதிகாரி அதிக வரி கேட்டதால் கொடுக்க இயலாத அந்த சகோதரன் , அந்த டிவியை விமான நிலையத்தில் உடைத்துவிட்டு சென்ற செய்தியை படித்ததில் இருந்து பெரும் சோகம் சூழ்ந்து கொண்டது .வெளிநாட்டில் வாழும் ஒரு சாதாரணன் அந்த டிவியை வாங்க எத்தனை நாள் காத்திருப்பான் எப்படியெல்லாம் அதற்க்கு பணம் சேர்ப்பான் என்பது இங்கு உள்ளவருக்கு மட்டுமே தெரியும் .ஆசையாய் வாங்கிய அந்த டிவியை அவனே உடைத்தெறியும் போது அவன் மனம் எத்தனை துன்பங்களை சந்தித்திருக்கும் நினைக்கும் போதே மனம் பதறுகிறது .

இந்த செய்தி அறிந்த என் இனிய நண்பர் Bhaskaran Sukumaran அவர்களின் நண்பர்கள் அந்த சகோதரனுக்கு சாம்சங் (SAMSUNG) டிவியை அன்பளிப்பாக தர முன் வந்துள்ளனர். அந்த சகோதரனின் முகவரி அல்லது அவரை பற்றிய தகவலை எனக்கு உடனே தெரியப்படுத்துங்கள் . எனது வாட்ஸ் ஆப் எண் 00973-33768876.
-வல்லம் பசீர்

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.