காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூரில் கல்லாறு குறுக்கே 8 கோடியில் புதிய அணைக்கட்டு! அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
தமிழ்க சட்டசபையில் நேற்று முன் தினம் திமுக உறுப்பினர் அரசின் புதிய அணைக்கட்டு திட்டங்கள் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த தமிழக...
தமிழ்க சட்டசபையில் நேற்று முன் தினம் திமுக உறுப்பினர் அரசின் புதிய அணைக்கட்டு திட்டங்கள் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த தமிழக நெடுஞ்சாலைகள் - பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கல்லாறு குறுக்கே 8 கோடி மதிப்பில் புதிதக ஒரு அணைக்கட்டு விரைவில் கட்டப்படும் என தெரிவித்தார்.

மேலும் மதுரை - காஞ்சிபுரம் உள்பட ஆறு இடங்களில் புதிதாக அணைக்கட்டுகள் கட்டப்படும் என்று நெடுஞ்சாலைகள்-பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வெங்காஞ்சேரி கிராமம் செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம் ஆணைவாடி கிராமம் செய்யாறு, பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமம் கல்லாறு, மதுரை பொட்டல்பட்டி கிராமம் பாலாறு, புதுக்கோட்டை மாவட்டம் பில்லுவலசை கிராமம் கொழுவனாறு, சிவகங்கை மாவட்டம் திருவுடையார்பட்டி பாலாறு ஆகிய ஆறு இடங்களில் அணைக்கட்டுகள் கட்டப்படும் என்றார்.

வி.களத்தூர் கல்லாற்றின் குறுக்கே அணை கட்டுவதால் விஸ்வக்குடி போல வி.களத்தூர் சுற்றுலா தளமாக மாறும். மேலும் வி.களத்தூர் சுற்றி உள்ள பகுதியில் விவசாயம் செழிக்கும். வி.களத்தூர் பகுதியில் நீர் மட்டம் உயரும்.  நமது ஊருக்கு குடி நீர் பற்றாக்குறை ஏற்படாது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
https://4.bp.blogspot.com/-owAFAUVDcJU/V6VSrhwHMlI/AAAAAAABDOs/p3GO_ydAbfMDsROZLwJohZiXXA0UYFeJgCLcB/s1600/IMG_20160806_064037.jpg

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top