Mohammed Farook Mohammed Farook Author
Title: கணவன்மார்களே! மனைவியிடம் 100/100 வாங்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100! [பகுதி 3]
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கணவன்மார்களே! மனைவியிடம் 100/100 வாங்க வேண்டுமா? இதோ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100..!  ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் ...
கணவன்மார்களே! மனைவியிடம் 100/100 வாங்க வேண்டுமா? இதோ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100..! 

ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மௌத்து (மரணம்) வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது.
 
கணவன் என்பவன் சில சந்தர்ப்பங்களில் தெரியாமல் தவறுகள் செய்ய நேரிடுகிறது. அப்படி தெரியமால்கூட பிழைகள் இன்றி தன் மனைவியோடு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு சில ஆலோசணைகளை இங்கே தருகிறோம்.

அள்ளாஹ் உங்களின் வாழ்க்கைய சீராகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும் வைப்பானாக. ஆமீன்...

கணவன்மார்களே! மனைவியிடம் 100/100 வாங்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100! [பகுதி 3]
  
41) அவளுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டே இருங்கள்.

42) சிறு சிறு பிரச்சினைகளை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம். பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை இல்லை.

43) வெளியில் உமக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், நஷ்டங்கள் காரணமாக அவைகளின் விளைவுகளை மனைவியிடம் காட்ட வேண்டாம்.

44) வீட்டை விட்டு வெளியே போகும் போது எங்கு போகிறோம் என்றும் திரும்பி வீட்டுக்கு வரும் போது இன்று வருகிறோம் என்றும் தெரிவித்துக்கொள்ளவும்.

45) வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் விவாகரத்து செய்யப்போவதாக அவளை மிரட்ட வேண்டாம்.

46) இருவரும் ஒருவருக்கொருவர் இபாதத்தில் உதவி ஒத்தாசையாய் இருக்க வேண்டும். நபியவர்கள் நவின்றார்கள் (தான் இரவில் விளித்து தொழுதுவிட்டு தனது மனைவியையும் தொழுவதற்காக எழுப்பி அவள் மறுத்தால் அவளது முகத்தில் தண்ணீர் தெளித்துவிடும் கணவனுக்கும், தான் இரவில் விளித்து தொழுதுவிட்டு தனது கணவனையும் தொழுவதற்காக எழுப்பி அவன் மறுத்தால் அவனது முகத்தில் தண்ணீர் தெளித்து விடும் மனைவிக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக).

47) முடிந்த வரை தனது வேலைகளை தானே செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

48) அவளது விருப்பத்திற்கு இணங்க விடுமுறை நாட்களில் அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள், அங்கு தங்கவும் அனுமதி வழங்குங்கள்.

49) வெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர், மனைவியின் தனிமை அவளை வழிகெடுக்க ஷைத்தானுக்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும். உமர் ரழி அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் இரவில் உலா வரும் போது ஒரு பெண்மணி தனது வீட்டில் தனிமையில் இருந்த வண்ணம் “இறையச்சம் மாத்திரம் இல்லையெனில் என்னுடன் படுக்கையில் இன்னுமொரு ஆண் கலந்திருப்பான்” என கவிதையொன்றை பாடக்கேட்டு, அதன் பின் உடனே தனது மகள் ஹப்ஸா நாயகியிடம் சென்று ஒரு பெண்ணுக்கு தனது கணவனை எவ்வளவு காலம் பிரிந்து இருக்க முடியும் எனக் கேட்க அவரது மகள் நான்கு மாதங்கள் என பதில் கொடுத்தார்.

உடனே கலீபா மார்க்க தேவைகளுக்காக வெளிச்சென்றிருக்கும் அனைவருக்கும் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வீடு செல்ல கட்டளை பிறப்பித்தார். நமது மனைவியை நாமே பாதுகாக்க வேண்டும். நாம் மனைவியின் விடயத்தில் அலட்சியமாக இருப்பின் ஷைத்தானின் சூழ்ச்சியினால் இன்னொருவன் நுழைந்து விடலாம். 

எல்லா துணைவியர்களும் இப்பெண்மணியை போன்று இருக்க மாட்டார்கள்.
(எண்ணறிவு கற்று எழுத்தறிவு படித்தாலும் பெண்புத்தி பின்புத்தியாகும்) என்பது ஓர் பழமொழி. அதற்கிணங்க, பொதுவாக பெண்கள் ஒன்றை செய்யுமுன் சிந்திக்க மாட்டார்கள். செய்து அதன் விளைவை கண்ட பின்னரே ஏன் செய்தோம் என கைசேதப்படுவார்கள். 

அதற்காக நமது மனைவியை சந்தேககண்கொண்டு பார்த்துவிடவும் கூடாது. அதனால் வாழ்க்கையில் நிம்மதியை இழந்து விடுவீர்கள். நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்காக எல்லா வாசல்களையும் திறந்துவிடுவது முட்டாள்தனம். அதாவது அவள் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதற்கான வழிமுறைகளை நாமே ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது.

50) நமது உயிர் தோழனாக இருந்தாலும் மிகவும் அத்தியவசிய தேவைக்கன்றி நம் மீது அன்பாக இருக்கும் மனைவியுடன் அறிமுகப்படுத்தி வைப்பது கூடாது. அதனால் ஷைத்தானுடைய பின்னணியினால் நம் மீதுள்ள அன்பு குறைந்து அவன் மீது அன்பு வைக்க தொடங்குவாள்.அதனால் நம் மீதுள்ள அவளது அன்பை நாமே குறைத்துவிடுகிறோம்.

51) அடிக்கடி வாசணைத்திரவியங்களை பூசிக் கொள்ளுங்கள். வாசணையோடு இருக்கும் போது மனைவி தன் பக்கம் வருவதற்கு விரும்புவாள்.

52) காலையில், மாலையில், இரவு வேளைகளில் பற்களை துலக்கவும். குறைந்த பட்சம் இருமுறையாவது துலக்கவும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மனைவியன் பக்கத்தில் சென்று பேசும் போது வாய் துர்நாற்றம் வீசாது.

53) தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சகல விதத்திலும் சுத்தமாக இருங்கள். முக்கியமாக நாற்பது நாட்களுக்கு ஒருமுறையேனும் மருமஸ்தான முடிகளை சிரைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

54) நீங்கள் அவளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிட வேண்டாம். ((மனைவிக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? என நபி ஸல்லல்லாஹு அலைஹீ வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது.அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹீ வஸல்லம் அவர்கள் : நீர் உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும், நீர் அணியும் போது அவளையும் அணியச்செய்வதும், அவளது முகத்தில் அறையாமல் இருப்பதும், அவளை இழிவு படுத்தாமல் இருப்பதும், வீட்டில் தவிர அவளை வெளியிடங்களில் எல்லோர் முன்னிலையிலும் கண்டிக்காமல் இருப்பதும் கணவனின் கடமை என நபி ஸல்லல்லாஹு அலைஹீ வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள்.))

55) ஜாஹிலிய்யாக்கால நடைமுறை போன்று அவளை மாதவிடாய் காலங்களில் அன்றாட கூட்டு வேளைகளில் ஒதுக்கி விட வேண்டாம்.

56) மனைவி ஆசையோடு தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு தன்னை நெருங்கும் போது நீங்கள் எவ்வாறான களைப்போ அல்லது பொடு போக்கோ இருப்பினும் சரியே, உங்களின் பிரச்சினையை அறியாத அந்த அழகிய மனைவியின் ஆசைக்கு கொஞ்ச நேரம் ஈடு கொடுங்கள்.

57) தாம்பத்தியத்தில் மனைவி திருப்தி கண்ட பிறகு தான் ஓய்வெடுக்க வேண்டும். அவளின் ஆசையை நிறைவு செய்யும் போது ஏற்படும் சுகம் கணவனுக்கு அதிகமாக இருக்கும். எனவே, முதலில் அவளின் தேவையை பூர்தி செய்ய வேண்டும்.
58) “பிஸ்மிள்ளாஹ்” என அனைத்து விடயங்களையும் ஆரம்பிக்க வேண்டும். தாம்பத்தியத்தில் ஈடுபடும் போதுகூட ‘பிஸ்மிள்ளாஹ்”வுடன் சேர்த்து அதற்கான துஆவையும் ஓதிக்கொள்ள்ளலாம். அதனால் பிறக்கும் குழந்தை ஷைத்தானை விட்டும் பாதுகாக்கப்படுகிறது.

59) மனைவியின் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மற்றும் அவரின் குடும்பத்தாரைப்பற்றி குறைவாகவும் ஏளனமாகவும் பேசாதீர்கள். அவ்வாறு தவறு ஏதாவதை சுட்டிக்காட்ட வேண்டுமாயின் அதனை பக்குவமாக எடுத்து அன்பாக விளக்கப் படுத்துங்கள்.

60) உங்களது குடும்பத்தாரிடம் அவளைப் பற்றி பெருமையாக பேசுங்கள்.அதனால் உங்களது குடும்பத்தினர் அவளை மதிப்பார்கள். அவளைப் பற்றி அவர்களிடம் ஏளனமாக பேசும் போது அவர்கள் அவளை மதிக்கத் தவறுவார்கள்.

அஷ்ஷேக் றுஷ்தி பாறுக் (அல் பஹ்ஜி), இலங்கை. / dawahworld

தொடரும்.......... நாளை 
 
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top