Mohammed Farook Mohammed Farook Author
Title: துபாயில் VPN மூலம் தடை செய்யப்பட்ட இலவச கால் செய்பவர்களுக்கான எச்சரிக்கை பதிவு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
VPN ( Virtual Private Network) என்பது ஒருவர் இணைய தளத்தை பார்வையிடும் போது அவருக்கும் அந்த இணையதளத்திற்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்த...
VPN ( Virtual Private Network) என்பது ஒருவர் இணைய தளத்தை பார்வையிடும் போது அவருக்கும் அந்த இணையதளத்திற்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தை பிறர் பார்வையில் இருந்து மறைத்து பாதுகாப்பான இணைப்பை வழங்கும் சேவை. இதன் மூலம் பொது இடங்களில் உள்ள இனைய தள இணைப்பை பயன்படுத்துவோர் பாதுகாப்பான முறையில் தங்களது மின்னஞ்சல்களை பார்வையிடவோ வங்கியில் பண பரிவர்த்தனைகள் செய்யவோ இயலும்.

முன்னதாக இந்த சட்டம் மூலம் VPN பயன்படுத்தி இணையதள குற்றம் புரிபவர்களை மட்டுமே கைது செய்ய முடியும் என்றும் தற்போது மாற்றியமைக்கப்பட்ட இந்த சட்டம் மூலம் VPN பயன்படுத்தும் எவரையும் கைது செய்ய முடியும் என்று அமெரிக்காவை மையமாக கொண்ட Private Internet Access அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தின் படி அமீரகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் எந்த ஒரு தளத்தையும் VPN பயன்படுத்தி பார்த்தால் அது குற்றமாகக் கருதப்படும். தற்போது அமீரகத்தில் வசிக்கும் மக்களில் அதிகம் பேர் அப்பகுதியில் தடை செய்யப்பட்டிருக்கும் அலைபேசி செயலிகளை பதிவிறக்க VPN ஐ பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இலவச Voip சேவையை வழங்கும் பல அலைபேசி செயலிகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய பெரும்பாலான மக்கள் VPN சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற VOIP சேவைகள் மூலம் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தவிர்க்க இத்தகைய சட்டங்கள் ஏற்ப்படுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக இணையதளம் பயன்படுத்தோவோரின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தபடுவது தான் இந்த VPN சேவை. பெரும் நிறுவனங்கள் பல தங்களது பணியாளர்களை தகவல் பாதுகாப்பிற்காக VPN பயன்படுத்த அறிவுறுத்தும் இந்த வேலையில் தொலை தொடர்பு நிறுவனங்களின் பேராசைக்காக மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அமீரகத்தின் இந்த சட்டம் அதிர்ச்சியை தருகிறது

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top