vkrnajur vkrnajur Author
Title: வி.களத்தூரி்ல் ரம்ஜான் எப்படி நடக்கும் -ஓர் பார்வை! (PHOTOS UPDATED)
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும்: வி.களத்தூரில் ரம்ஜான் எப்படி இருக்கும்? ஒரு சிறிய கண்ணோட்டம்: ரமலான் என்றாலே முதலில் பள்ளிவாசலை வண்ண விளக்குகள...
அஸ்ஸலாமு அலைக்கும்:
வி.களத்தூரில் ரம்ஜான் எப்படி இருக்கும்?
ஒரு சிறிய கண்ணோட்டம்:
ரமலான் என்றாலே முதலில் பள்ளிவாசலை வண்ண விளக்குகள் போட்டு அலங்கரிப்பது தான்.

பெருநாள் முந்தைய நாட்களிலேயே புத்தாடை வாங்கும் சந்தோஷம் அனைவருக்கும் உண்டு.
அதிலும் சிறுவர்கள் ஒரே ஆடை வாங்கி அணிவதில் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள்.



பெருநாட்களுக்காகவே வெளிநாட்டிலிருந்து வரும் நபர் அதிகம்!
இன்ஷா அல்லாஹ்

நாளைக்கு பெருநாள் இருக்குமா? என பிறையை பார்ப்பார்கள். நாளை பெருநாள் என்று தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சிவுடன் இருப்பார்கள்.

 பெருநாள் முந்தைய நாள் இரவில் சிறுவர்கள் நோட்டீஸ் ஒட்டி ரமலான் வாழ்த்து தெரிவிப்பார்கள்.
பிறகு  TTPL சென்று டீ குடித்தும், ஹோட்டலில் இரவு விருந்து சாப்பிட்டும் இரவை சந்தோஷமாக கழிப்பார்கள்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் மருதாணி இடுவார்கள்.

விடிந்தவுடன், காலை சுமார் 7.00 மணிக்கு தவ்ஹீத் மர்கஸ் திடலிலும்,வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் 9.00 
மணிக்கும்,மில்லத் நகர் பள்ளி வாசல் திடலில் 8.30 மணிக்கும் நடைபெறும். இதில் அனைத்து 
இஸ்லாமியர்களும் கலந்து கொள்வார்கள்.
பின்பு தக்பீர் ௪றி நடைபயணமாக கப்பர்ஸ்தான் சென்று இறந்தவர்களுக்கு துஆ செய்வார்கள்.
பின்பு அனைவரும் முஷாபாஹ் செய்து கொள்வார்கள், மற்றும் வாழ்த்து சொல்லுவார்கள் .

அதன் பின் நண்பர்களையும், உறவினர்களையும், சந்தித்து வாழ்த்து ௪றிக்கொள்வார்கள்.

மதியம் அனைத்து வீடுகளிலும் பிரியாணி விருந்து தான். 
அந்த விருந்தை சிலர் மாற்று மத நண்பர்களை அழைத்து விருந்து அளிப்பார்கள்.
அதுமட்டுமின்றி ஏழைகளுக்கும் சாப்பாட்டை தருவார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
 பிறகு மாணவர்கள் பைக்கில் நண்பர்களுடன் சுற்றுவார்கள்,
ரஞ்சன்குடி கோட்டைக்கு சென்று மகிழ்வார்கள்.

அடுத்த நாள் :
இன்று ஆற்று நோன்பு சில பேர் குடும்பத்துடன் சுற்றுலா செல்வார்கள், ஆனால் இப்போ மாணவர்களும் சிறுவர்களும் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்!

ஆனால் எப்பையுமே ஆற்று நோன்பு கடைபிடிப்பார்கள்
ஆண்களும் பெண்களும் சென்று அங்குள்ள சிறிய கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் .
ஆண்கள் ௪ட்டம் கபடி விளையாடுவார்கள்.
இரண்டு நாள் முழுவதும் சந்தோஷம் நிறைந்து காணப்படும் வி்களத்தூரில்.
வர இருக்கும் புனித ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்களுடன்!
R.நஜூருதீன்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top