காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: அழகான உருவத்தை விட அழகான நடத்தையே நல்லது.. சொன்னது ராம்குமார்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சென்னை: ராம்குமாரைப் போலவே அவரது பேஸ்புக் பக்கமும் மிக மிக அடக்கமாக காணப்படுகிறது. ஒரு இளைஞனின் பேஸ்புக் பக்கம் போலவே அது இல்லை. மிக மிக ச...
சென்னை: ராம்குமாரைப் போலவே அவரது பேஸ்புக் பக்கமும் மிக மிக அடக்கமாக காணப்படுகிறது. ஒரு இளைஞனின் பேஸ்புக் பக்கம் போலவே அது இல்லை. மிக மிக சாதாரணமாக இருக்கிறது.
சுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாரைப் பார்க்கும் பலருக்கும், இந்தப் பையனா இப்படிக் கொடூரமாகக் கொலை செய்தான் என்ற ஆச்சரியம்தான் எழுகிறது. அந்த அளவுக்கு ராம்குமாரின் முகத்தில் அத்தனை அமைதிக் களை.
ராம்குமார் யாரிடமும் அதிகம் பழகாதவராக, கூச்ச சுபாவம் கொண்டராக இருந்திருக்கிறார். யாரிடமும் அவர் வெளிப்படையாக பேச மாட்டார் (Introvert) என்று கூறப்படுகிறது. அவரது பேஸ்புக் பக்கமும் அதைத்தான் நிரூபிப்பதாக உள்ளது.

ஆரவாரம் இல்லாத பேஸ்புக்
தனது பக்கத்தில் பெரிய அளவில் போஸ்ட் எதையும் போடவில்லை ராம்குமார். வழக்கமாக சிலர் போடும் காலை வணக்கம், மதிய வணக்கம், இரவு வணக்கம் போன்ற போஸ்ட் கூட இல்லை.
எப்போதாவது
எப்போதாவதுதான் போஸ்ட் போட்டுள்ளார் ராம்குமார். மிக மிக அரிதாகவே அவரது பக்கங்களில் போஸ்ட்டுகள் காணப்படுகின்றன. சில கிரிக்கெட் படங்கள் காணப்படுகின்றன.
தத்துவ வாசகம்
அவர் 2012ம் ஆண்டு போட்டுள்ள ஒரு போஸ்ட் கண்ணைக் கவருவதாக உள்ளது. அது அழகான உருவத்தை விட அழகான நடத்தையே நல்லது என்ற வாசகம். எதற்காக இந்த வாசகத்தைப் போட்டார் ராம்குமார் என்று தெரியவில்லை.
அதிக லைக்குகள் இல்லை
ராம்குமாரின் போஸ்ட்டுகளுக்கு பெரிய அளவில் லைக்குகளோ அல்லது ஷேர்களோ இல்லை. அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பார்த்து லைக் போட்டுள்ளனர்.
தோழிகள் குறைவு
ராம்குமாரின் நண்பர்கள் பட்டியலில் மொத்தம் 309 பேர் உள்ளனர். அவர்களில் தோழிகள் எண்ணிக்கை மிக மிக குறைவு. விரல் விட்டு எண்ணும் அளவுக்கே உள்ளன. சுவாதியின் பெயர் நட்புப் பட்டியலில் இல்லை.
சுவாதி குறித்தோ, காதல் குறித்தோ எதுவும் இல்லை
இவரது பேஸ்புக் பக்கத்தில் காதல் குறித்து எந்த வாசகமும் இடம் பெறவில்லை. அதேபோல சுவாதி குறித்தும் எந்தக் குறிப்பும் இடம் பெறவில்லை. சுவாதியைத் தீவிரமாக காதலித்து கொலை செய்யும் அளவுக்குப் போன ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தில் காதல் குறித்து ஒரு வாசகமும் இடம் பெறவில்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியமாக உள்ளது.
சுவாதி பக்கம் முடக்கம்.. ராம்குமார் பக்கம் முடக்கப்படாதது ஏன்?
சுவாதி படுகொலைக்குப் பின்னர் அவரது பேஸ்புக் பக்கம் மின்னல் வேகத்தில் முடக்கப்பட்டது. ஆனால் ராம்குமாரின் பக்கம் இதுவரை முடக்கப்படாமல் உள்ளது. இதுவும் சில கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.
thanks - newstig.com

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top