Mohamed Farook Mohamed Farook Author
Title: பெரம்பலூரில் கபாலி படம் ரிலீஸ் இல்லை! ரசிகர்கள் தவிப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் தியேட்டர்களில் கட்டணத்தை 30 ரூபாய்க்கு மேல் உயர்த்தக்கூடாது என கோட்டாட்சியர் பேபி அவர்கள் தியேட்டர் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை...
பெரம்பலூர் தியேட்டர்களில் கட்டணத்தை 30 ரூபாய்க்கு மேல் உயர்த்தக்கூடாது என கோட்டாட்சியர் பேபி அவர்கள் தியேட்டர் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பால் பெரம்பலூர் மாவட்டத்தில் கபாலி திரைப்படம் திரையிட முட்டுக் கட்டை போடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

ரஜினி காந்த் நடித்துள்ள கபாலி திரைப் படம் நாளை 22ம் தேதி உலகமெங்கிலும் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. கபாலி திரைப்படம் பெரம்பலூர் மாவட்டத்தில் திரையிடப்படுவது கேள்விக்குறியாக உள்ளது. காரணம் இதற்கு அரசு தரப்பில் போடப்பட்டுள்ள முட்டுக் கட்டையே காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரம்பலூர் வருவாய் திரையரங்குகளில் அதிரடியாக ஆய்வு நடத்தியுள்ளார். அப்போது திரையரங்குகளின் டிக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள கட்டணங்களை வசூலிக்காமல், சராசரியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை வசூலிப்பதை அறிந்து வருவாய் கோட்டாட்சியர் பேபி தியேட்டர் நிர்வாகிகளிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

குறிப்பாக ரூ.30, ரூ.25, ரூ.5 ஆகியக் கட டணங்களில் டிக்கெகட்டுகள் இருக்கும் போது சராசரியாக எங்கு அமர்ந்தாலும் ரூ. 30 என வசூலிக்கப்பட்டு வருவது ஏனென்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் புதியத் திரைப்படங்கள் ரிலீஸ் செய்யும் போது சிறப்புக் கட்டணமாக அறிவித்து முதல் ஒரு வாரத் திற்கோ அல்லது 10 நாட்களுக்கோ அனைத்து டிக்கெட்டுகளும் ரூ.100 க்கோ, ரூ.60, ரூ. 70க்கோ விற்கப்படும் எனக் கூறப்பட்டதற்கும் அவர் தடை விதித்துள்ளார்.

இதனால் பல லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்கி வரக் கூடிய படத்தை குறைந்த கட்டணங்களைக் கொண்டடிக் கெட்டுகளால் வசூலிக்க முடியாதே என தியேட்டர் உரிமையாளர்கள் திணறிப் போய் உள்ளனர்.

இது குறித்து கலெக்டர் நந்தகுமாரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், வெளி மாவட்டங்களில் புதுப் பட ரிலீஸ் சமயங்களில், உயர்த்தப்பட்ட சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கான ஆதாரங்களைக் காண் பித்தால் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான பணிகளில் தியேட்டர் மேலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள் ள னர்.

இதே நிலைமை தான் அரியலூர் மாவட்டத்திலும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தும் பெரம்பலூரில் கபாலி திரைப்படம் திரையிட முடியா மல் போனால் என்ன செய்வதென அதிர்ச்சியடைந்துள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள், அருகிலுள்ள திருச்சி, துறையூர் பகுதிகளில் திரை யிடப்படும் திரையரங்குகளின் டிக்கெட்டுகளை விலை கொடுத்து வாங்கத் தொடங்கியுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மன்றத்திற்கு 20 முதல் 30 பேர் என மொத்தம் 250 மன்றங்கள் இருந்த போதும் ஆயிரக்கணக் கான ரசிகர்களின் ஆவலுக்கு அரசு தரப்பில் போடப்பட்டுள்ள முட் டுக்கட்டைக்கு இன்று மாவட்ட நிர்வாகத்துடன் நடக்கும் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையிலாவது விடை கிடைக்குமா என பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top