Mohammed Farook Mohammed Farook Author
Title: புனித மக்கா, மதினா தலங்களில் போகிமான் விளையாடும் கூறுகெட்டவர்கள்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
யூத இலுமினாட்டினரின் முக்கிய திட்டங்களில் ஒன்று மக்களை வீண் விளையாட்டுக்களின் பக்கம் திசை திருப்பி இளைய சமுதாயத்தின் மூளையை மழுங்கடிப்ப...
யூத இலுமினாட்டினரின் முக்கிய திட்டங்களில் ஒன்று மக்களை வீண் விளையாட்டுக்களின் பக்கம் திசை திருப்பி இளைய சமுதாயத்தின் மூளையை மழுங்கடிப்பது அதனால் தான் இஸ்ரேலியர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு மட்டும் கார்ட்டூன் விளையாட்டுக்களை தடை செய்திருப்பது ஆனால் இவை போன்ற பயனற்றவைகளை உலகிற்கு அறிமுகம் செய்வதும் யூத கும்பல் தான்.

கார்ட்டூன் விளையாட்டுக்களின் நீட்சியாக தற்போது ‘போகிமான் கோ’ எனப்படும் ஆண்ட்ராய்டு போன் விளையாட்டு தற்போது அமெரிக்கர்களை கிறுக்கிப் பிடித்து நிஜமாகவே ‘தெருத்தெருவாக, வீடுவீடாக, சந்து பொந்துகள் என அலைய’ விட்டுக் கொண்டுள்ளது மேலும் கார்ப்பரேட் வியாபார கும்பலின் விளம்பர யுக்தியால் உலகளவில் வேகமாய் பரவி வரும் அதேவேளை பல நாடுகள் இதன் ஆபத்தை உணர்ந்து தடை செய்தும் வருகின்றன.

இந்த ஷைத்தானிய விளையாட்டு நமது இரு புனித ஹரம் ஷரீஃப் பள்ளிகளையும் விட்டு வைக்கவில்லை, புதிய மடாஃப் பகுதியில் 5 பேர் போகிமான் விளையாடி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும், போகிமான் இணையதள சவூதி குழுவினர் ஆய்வு செய்த போது இரு புனித ஹரம் பள்ளிகளின் வாசற்கதவுகள், கஃபாவின் மேல் தளம் என இந்த விளையாட்டு தொடர்புபடுத்தப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, புனித ஹரம் ஷரீஃபுகளான மக்கா, மதினா பள்ளிகளின் புனிதத்தன்மை, நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பு அனைத்தும் கேள்விக்குறியாகி வருவதாகவும், ஜிபிஎஸ் சிஸ்டத்தில் கூகுள் மேப் இணைப்பில் இயங்கும் இந்த விளையாட்டை உடனே சவூதியில் தடை செய்ய வேண்டும் என பல மார்க்க அறிஞர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர், இது தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் எச்சரித்துள்ளனர்.

மேலும், இரு புனித ஹரம் ஷரீஃபிலும் சமீபகாலமாக போட்டோ, வீடியோ, செல்ஃபி எடுத்தல் என சகட்டுமேனிக்கு பெருகி தற்போது போகிமான் விளையாட்டு வரை நீண்டுள்ளதால் மொத்தமாகவே மொபைல் போன் பயன்பாடுகளை இரு புனித ஹரம் ஷரீஃப் மஸ்ஜிதுகளின் புதிய மடாஃப் ( Mataf ) பகுதியில் தடை செய்யவும் அல்லது 3G 4G போன்ற சேவைகளை இரு புனிதப்பள்ளிகளை சுற்றி நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக எழுந்து வருகிறது.
தமிழில் நம்ம ஊரான்

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top