காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: இந்தியாவில் ஒரு காஸா – காஷ்மீர் !
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
கடந்த ஜூலை 9 சனிக்கிழமை அன்று இந்திய ராணுவத்தால் 22 வயது புர்ஹான் முஸப்பர் கொல்லப்பட்டதைக் கண்டித்து காஷ்மீர் முழுக்க வன்முறை நடந்து வர...
கடந்த ஜூலை 9 சனிக்கிழமை அன்று இந்திய ராணுவத்தால் 22 வயது புர்ஹான் முஸப்பர் கொல்லப்பட்டதைக் கண்டித்து காஷ்மீர் முழுக்க வன்முறை நடந்து வருகிறது.
ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் என 400 கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.23 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போராட்டகாரர்கள் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ராணுவத்துக்கு எதிராக கோஷம் எழுப்பி போராடி வருகின்றனர்.
ஜூலை 8 முதல் இணையதளம் மற்றும் மொபைல் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, ஜூலை 9 முதல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது, மாநில பள்ளி தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது, ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தியதாக தெளிவாக தெரிகிறது.
தெற்கு காஷ்மீர் பகுதியில் நடந்த ஆர்பாட்டத்தில் 8 பேர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க பலர் அருகில் உள்ள ஆற்றில் குதித்து உள்ளனர். போராட்டகாரர்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டை நேரில் பார்த்தவர்கள் இதைக் குறித்து கூறியுள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடாது என மருத்துவமனைகளுக்கு ராணுவம் உத்தரவுவிட்டுள்ளது. 1947 ஆண்டு முதல்இ ந்திய காஷ்மீர் பகுதியில் இது வரை ராணுவத்தால் 68000 பேர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். 1947 நவம்பர் 2, அன்றைய பிரதமர் நேரு அளித்த வாக்குறுதி, நாங்கள்(இந்தியா) உறுதி அளிக்கிறோம் காஷ்மீரை தீர்மானிக்கும் முடிவு முழுக்க முழுக்க பொதுமக்கள்(காஷ்மீரிகளிடம்) மட்டுமே உள்ளது. இந்த வாக்குறுதி காஷ்மீர் மகாராஜா, காஷ்மீரிகள் மற்றும் உலக மக்கள் அனைவரிடமும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று வரை ஐ.நா சார்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தாமல் ராணுவத்தை ஏவி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது இந்திய அரசாங்கம். அறவழியில் போராடி பலன் இல்லை என போராளி குழுக்களிடம் சேர்ந்து காஷ்மீர் மக்கள் ஆயுதம் ஏந்தி மடிவது தொடர்கின்றது .
புர்ஹான் முஸப்பர் அவர்களின் இறுதி தொழுகையில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சம் பேர் ஆகும் . இறுதி தொழுகையில் கலந்து கொள்ளாதவர்கள் அடுத்து அடுத்து 20 முறை கொல்லப்பட்ட புர்ஹான் முஸப்பருக்காக தொழுகை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
– அபூஷேக் முஹம்மத்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top