"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
31/7/16

அதிமுக பெண் எம்பி அறைந்த விவகாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் அதிமுக பெண் எம்பி சசிகலாவிடம் அறைவாங்கிய திமுக எம்பி திருச்சி சிவா அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனது கட்சி தலைவரிடம் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவெடுப்பேன் என்று தெரிவித்தார்.

அதிமுக பெண் எம்பி சசிகலா புஷ்பா நேற்று டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்ட்டு அவரது கன்னத்தில் அறைந்து சட்டையை பிடித்து இழுத்தார்.

இந்த விவகாரம் டெல்லி மட்டுமல்லாமல் இந்தியா முழுதும் எதிரொலித்தது. இது பற்றி பேட்டி அளித்த சசிகலா புஷ்பா நான்கு முறை அறைந்தேன் , அதில் திருச்சி சிவா செயின் அறுந்து போனது. எனது தலைமையை விமர்சித்தார் அதனால் அறைந்தேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து சசிகலாவின் டெல்லி வீடு தாக்கப்பட்டது. பின்னர் சென்னை திரும்பிய திருச்சி சிவா விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவாது:

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா என்னை தாக்கியது எனக்கு தர்மசங்கடத்தை உருவாகி உள்ளது. அவர் ஒரு பெண் என்பதால் வேறு எதுவும் நான் அங்கு பேசவில்லை. நான் வகிக்கும் பதவிக்கு மரியாதை கொடுத்து அமைதியாக இருந்து விட்டேன்.

ஆனால் கைகலப்பு என்று செய்திகள் வருவது வருத்தமளிக்கிறது. ஆளுங்கட்சியை விமர்சித்து பேசினால் பொது வெளியில் தாக்குவது என்கிற புது முறையை கொண்டுவருகிறார் சசிகலா புஷ்பா. முதல்வர் குறித்து அவதூறு பேசியாதாக பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார் நான் தரக்குறைவாக விமர்சிப்பபவன் அல்ல .

சசிகலா புஷ்பா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கபடுமா என்ற கேள்விக்கு திமுக தலைவருடன் கலந்து ஆலோசித்துபின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.