காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: முஸ்லிம்களின் பொறுமையை சோதிக்கும் தினமலர்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
...
m6 
காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் தலைமையாசிரியரின் மகனான புர்கான் முஷாபர் (வயது 22) என்ற இளைஞரை காஷ்மீர் ராணுவத்தினர் அநியாயமான முறையில் சுட்டுக்கொன்றனர்.

அவரது படுகொலையை கண்டிக்கும் விதமாகவும், அவரது ஜனாஸா ஊர்வலத்தில் 2 லட்சம் பேர் கலந்துள்ளார்கள்.

இது காஷ்மீரில் நடக்கும் முதல் படுகொலையல்ல, தனி நாடாக இருந்த காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த காலத்திலிருந்து காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமா ? பாகிஸ்தானுக்கு சொந்தமா ? அல்லது தனி நாடாக ஆகுமா ? என்ற மும்முனை போராட்டத்தினால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

பூலோகத்தின் சொர்க்க பூமியான காஷ்மீர் தங்களுக்கு சொந்தம், தங்களுக்கு சொந்தம் என்று மும்முனை போராட்டத்தினால் முஸ்லிம் ஆண்கள் மட்டும் படுகொலை செய்யப்படவில்லை, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களும் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி நடந்த பல்லாயிரக்கணக்கான படுகொலையின் வரிசையில் அண்மையில் படுகொலை செய்யப்பட்டது புர்கான் முஷாபர்.
இதனால் விரக்தியின் விளம்பில் இருந்த மக்களில் 2 லட்சம் பேர் ஜனாஸா ஊர்வலத்தில் கலந்துள்ளனர்.

முஸ்லிம் சமுதாயத்தையே கொச்சைப்படுத்தும் விதமாக புர்கான் முஷாபர் தீவிரவாதி என்றும், ஜனாஸா ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தீவிரவாதிகள் என்றும் அவர்கள் பாகிஸ்தான் கொடியுடன் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் போட்டதாகவும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தின் பொறுமையை அளவுக்கு அதிகமாக சோதிக்கிறது தினமலர்.

தீவிரவாதிக்கு 2 லட்சம் மக்கள் கூடுவார்களா என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் வேண்டுமென்றே முஸ்லிம் சமுதாயத்தையே தீவிரவாத சமுதாயமாக தினமலர் கொச்சைப்படுத்தியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உருவம் வரைந்து முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி சமுதாய மக்களின் மிக கடுமையான எதிர்ப்பை சந்தித்த தினமலர் சில வருடங்களாக அடங்கி கிடந்தது. மீண்டும் துளிர் விடுகிறது. தினமலருக்கு சமுதாய இயக்கங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
thanks - srilankamuslims.lk

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top