காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: முத்தமிடுவதால் பரவும் வைரஸ்: எச்சரிக்கை!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முத்தமிடுகையில் ஒரு தெளிவற்ற வைரஸ் பரவுவதாக சொல்கிறார்கள். இது பெண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும...
இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முத்தமிடுகையில் ஒரு தெளிவற்ற வைரஸ் பரவுவதாக சொல்கிறார்கள். இது பெண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

மேற்படி HHV-6A வைரஸ் முத்தமிடப்படுவதால் தொற்றுவதாக இனங்காணப்பட்டது இதுவே முதல் தடவையல்ல. ஆனாலும் அது மலட்டுத்தன்மையுடன் சம்பந்தப்பட்டிருப்பது அறியப்பட்டது இதுவே முதல் தடவை.

இவ் ஆய்வின் போது பரிசீலிக்கப்பட்ட 30 கருத்தரிப்பு பிரச்சனையுள்ள பெண்களில் 13 பேர் அதாவது 43 சதவீதத்தினரில் HHV-6A வைரஸ் இருப்பது இனங்காணப்பட்டது. மீதி 36 ஆரோக்கியமான பெண்களில் மேற்படி வைரஸ் அவதானிக்கப்படவில்லை.

இவ் HHV-6A வைரஸ் மற்றும் அதன் குடும்பமான HHV-6B வைரஸ் ஆனவை எந்தவொரு அவதானிக்கக்கூடிய அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை.
இவ் ஆய்வில் HHV-6A வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்களிலும் Cytokines அளவு அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்டது. இவை கருக்கட்டப்பட்ட முட்டையின் வளர்ச்சியை தூண்டும் சமிக்ஞைப் புரதங்களாகும்.

அதேநேரம் Estradiol ஓமோனின் அளவும் கூடுதலாக காணப்பட்டமை, இவ் ஓமோன் HHV-6A வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியப்பாட்டை அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகளை சந்தேகப்பட வைத்தது. ஆனாலும் HHV-6A அல்லது HHV-6B க்கு எதிரான சிகிச்சைகள் எதுவும் தற்போது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top