Mohamed Farook Mohamed Farook Author
Title: அப்துல் கலாமுக்கு சிலை எழுப்ப ஜமாஅத்துல் உலமா சபை எதிர்ப்பு
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு பேய்க்கரும்பு நினைவிடத்தில் சிலை எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் சி...
மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு பேய்க்கரும்பு நினைவிடத்தில் சிலை எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் சிலை எழுப்பக் கூடாது என்று  ஜமாஅத்துல் உலமா சபை  அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிலை எழுப்புவது முஸ்லிம் ஷரியத் சட்டத்திற்கு எதிரானது என்று ஜமாஅத்துல் உலமா சபை  கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கவுன்சில் உயர்மட்டக் கூட்டத்தை கூட்டி முடிவெடுத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜமாஅத்துல் உலமா சபை  தலைவர் வலியுல்லா நூரி கூறும்போது, “இஸ்லாம் விக்கிரக ஆராதனைக்கும், தனிநபர் வழிபாட்டுக்கும் அனுமதியளிக்காது. 

கலாமுக்கு மரியாதை செய்வதென்பது அவரது உபதேசங்களின் படி நடப்பதாகும். வலுவான, வளர்ந்த இந்தியா என்ற அவரது லட்சியத்தை நிறைவேற்றுவதும், இளைஞர்கள் உச்சத்தை எட்ட கனவு காணவேண்டும் என்று கூறியுளார், இதனை நிறைவேற்றுவதும்தான் கலாமுக்கு நாம் செய்யும் மரியாதை” என்றார்.

கலாமின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக, இதன் மூலம் இளைஞர்கள் அவரிடமிருந்து ஊக்கம் பெற நினைவு மண்டபம், ஆடிட்டோரியம், அறிவுமையம் அல்லது மியூசியம் அமைப்பதே சிறந்தது. அதிகாரிகள் சிலை அமைப்பதை தவிர்ப்பது நல்லது என்று ஜமாஅத்துல் உலமா சபை  செயலர் எம்.அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

தங்களது இந்தக் கருத்தை கலாம் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதாகவும், ஆனாலும் ஜூலை 27-ம் தேதி கலாம் சிலைதிறப்பின் போது தாங்கள் எந்தவித இடையூறுமோ, ஆர்பாட்டமோ நடத்த மாட்டோம் என்றும் ஜமாஅத்துல் உலமா சபை  உறுதியளித்தது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top