Mohamed Farook Mohamed Farook Author
Title: பட்ஜெட் உரை நடுவே ஓ.பி.எஸ் கவிதை வடிவில் 'அம்மாவை' புகழாரம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம். முதலில் சுமார் ஐந்து நிமிடங்களுக்...
2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம்.
முதலில் சுமார் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக, முதல்வர் ஜெயலலிதா பற்றி கவிதை வடிவில் புகழுரை வடித்தார் பன்னீர்செல்வம்.
இதன்பிறகு பட்ஜெட் உரையை படித்தார் ஓ.பி.எஸ். ஆனால் நடுவே சில நிமிடங்கள் முதல்வர் பற்றி புகழ தயங்கவில்லை அவர்.
அப்படி ஓ.பி.எஸ். நடுவே உதிர்த்த வார்த்தைகள் இதோ: திருவள்ளுவர் கூறியதை போலவே, சொல்லியதை சொல்லியபடி செய்பவர் அம்மா. சட்டசபை தேர்தலில் அம்மாவுக்கு மகத்தான ஆதரவு அளித்து 32 ஆண்டுகளுக்கு பிறகு, தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியளிக்க வாய்ப்பு தந்தனர் தமிழக மக்கள். அந்த தமிழக மக்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன் என்று அம்மா கூறினார்.
எனது நன்றிக்கடனை செயல் மூலம் காட்டுவேன் என்றும், தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவேன் என்றும், தேர்தல் வெற்றி செய்தி வந்ததுமே, அம்மா தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றும் பொருட்டு, 5 முக்கிய அரசாணைகளை வெளியிட்டு, தனது வாக்கை நிறைவேற்றியுள்ளார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top