vkrnajur vkrnajur Author
Title: இந்து மதத்துக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்.?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஒரே இறைவனையும் அவனால் அனுப்பப் பட்ட முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாமிலிருந்து கடைசி தூதரான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள...
ஒரே இறைவனையும் அவனால் அனுப்பப் பட்ட முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாமிலிருந்து கடைசி தூதரான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரையுள்ள அனைத்து தூதர்களையும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் இந்துக்கள் எந்த இறை தூதர்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் இறைத் தூதர்கள் மூலமாக அருளப்பட்ட வேதங்களை வைத்திருக்கின்றார்கள். மனிதர்களைப் பிரிக்கும் சாதி அமைப்புகளை உண்டாக்கும் வர்ணாசிரமத் தத்துவம் பிற்பாடு மனிதக் கரங்களால் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். வர்ணாசிரமக் கருத்துக்களை நீக்கி விட்டுப் பார்த்தால் குர்ஆன், பைபிள், தோரா, ரிக், யஜீர்,அதர்வண வேதங்கள் அனைத்தின் கருத்துக்களும் பெரும்பாலும் ஒத்துப் போவதைப் பார்க்கிறோம்.

யூத வேதமான தோரா அல்லது பென்ட்டாஸ் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு யூதரிடம் கேட்டால் அவர் மோஸஸ் மூலமாக அருளப் பட்டது என்று கூறி விடுவார். கிறித்தவ வேதமான சுவிஷேஷம் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு கிறித்தவரைக் கேட்டால் இயேசு கிறிஸ்து மூலமாக அருளப் பட்டது என்று கூறி விடுவார். இஸ்லாமிய வேதமான திருக்குர்ஆன் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு முஸ்லிமைக் கேட்டால் முகமது நபி என்று உடன் கூறி விடுவார். இதே கேள்வியை பழம் பெரும் வேதங்களுக்குச் சொந்தக் காரர்களான இந்துக்களிடம் ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்கள் யார் மூலமாக அருளப் பட்டது என்று கேட்டால் அவர்களால் பதில் சொல்ல முடியாது.

இந்து வேதங்களை பகுத்து தொகுத்தவர் வியாசர் என்று சிலர் சொல்வர். வியாசர் எனும் சமஸ்கிரத சொல்லின் பொருளே தொகுப்பாளர் என்பதாகும். ஆனால் இங்கு தொகுப்பாளரைக் கேட்கவில்லை. வேதம் யார் மூலமாக அருளப் பட்டது என்பதுதான் கேள்வி. இதே போல் தான் இஸ்லாமியரின் வேத நூலான குர்ஆனை முகமது நபிக்கு பிறகு புத்தக வடிவில் தொகுத்தவர் உஸ்மான் என்று வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறிகிறோம்.

வேதம் என்றால் அது கடவுளின் வார்த்தையாக இருக்க வேண்டும். எனவேதான் அதற்கு நாம் உயர்ந்த மதிப்பைக் கொடுக்கிறோம். மதம் என்று ஒன்று இருந்தால் அதற்கு வேதம் என்று ஒன்று இருக்க வேண்டும். அந்த வேதம் யார் மூலமாக அருளப் பட்டது என்ற தெளிவு இருந்தாக வேண்டும். சாதாரணமாக அனுப்புனரோ பெறுநரோ இல்லாத ஒரு கடிதம் எவ்வளவு தான் உயர்ந்த நடையில் இருந்தாலும் மக்களிடம் எடுபடுவதில்லை. பழம் பெருமை வாய்ந்த இந்து சமுதாயம் நேர் வழிக் காட்ட வந்த வேதம் யாரால் அருளப் பட்டது என்ற தகவலை தொலைத்து விட்டு நிற்கிறது.

‘ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு நேர் வழி காட்டியுண்டு’ -(13 : 7) என்று குர்ஆன் கூறுகிறது.
அப்படியானால் இந்து சமுதாயத்திற்கு வந்த இறைத் தூதர் யாராக இருக்க முடியும்?
‘ஏ அக்னீ !நியூஹ் அவர் தூதர் என்று ஒப்புக் கொள்கிறேன்.’ 1 : 13,14 – ரிக் வேதம்

நோவாவுடைய பெயர் ரிக் வேதத்தில் 51 இடங்களிலும், யஜீர் வேதத்தில் இரண்டு இடங்களிலும், சாம வேதத்தில் எட்டு இடங்களிலும், அதர்வண வேதத்தில் பதினான்கு இடத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது
ஆதாரம் வேத ஆராய்ச்சி தொகுப்பான”ணோW ஓற் ணேVஏற்” – ந்ரிட்டென் ப்ய் ஸ்கமெச் ணவட்
இதிலிருந்து இந்து சமூகத்துக்கு என்று வந்த தூதர்களில் வேதம் கொடுக்கப் பட்ட தூதர் நோவா என்று அறிய முடிகிறது.

இந்து வேதங்களில் எழுபத்தைந்து இடங்களில் தூதர் நோவாவுடைய குறிப்பு காணப்படுகிறது. இஸ்லாமியரின் வேதமான குர்ஆனில் முகமது நபியின் பெயர் வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே குறிப்பிடப் படுகிறது. ஆனால் முஸ்லிம்கள் முகமது நபியை இறைத் தூதர் என்று நம்புகிறார்கள். எழுபத்தைந்து இடங்களில் நோவாவின் குறிப்பை தங்கள் வேதங்களில் வைத்திருக்கும் இந்துக்களோ நோவாவை ஏற்க மறுக்கிறார்கள்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் குறிப்பிட்ட பிரதேசத்திற்கும் – குறிப்பிட்ட இனத்தினருக்கும் மட்டுமே உரியவர்கள் ஆவார்கள். ஆப்ரஹாம், இஸ்மாயீல் போன்றோர்கள் அரபு இனத்தவருக்காகவும், மோஸஸ், தாவூது, ஏசு போன்றோர் இஸ்ரவேல் இனத்தவருக்காகவும் நோவா அவர்கள் ஜலப் பிரளயத்திற்கு முன்பும், ஜலப் பிரளயத்திற்கு பின்பு சில காலமும் அன்றைய ஆதிக்கத்தின் சந்ததிகள் அனைவருக்கும் பொதுவான தூதராக இருந்தார். பிற் காலத்தில் அவர்கள் குமாரர்கள் மூலமாக சந்ததி பிரிந்த போது ஆரிய சமுதாயத்தினருக்கு மட்டுமான தூதராக நோவா இருந்திருக்கிறார்.

‘நோவாவுக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல முஹம்மதே உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம்.’ 4 : 163 – குர்ஆன்

இதன் மூலம் நோவாவுக்கு அருளப் பட்ட வேதத்தைப் போலவே அதற்கு பின் வந்த தூதர்களுக்கும் வேதம் அருளப்பட்டதாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நோவாவுக்கு கொடுக்கப் பட்ட வேதத்திற்கும் முகமது நபிக்கு கொடுக்கப் பட்ட வேதத்துக்கும் பல ஒற்றுமைகள் இருக்க வேண்டும் என்று தெளிவாகிறது. இந்த ஒற்றுமையைப் பற்றி ‘இந்து மதம்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top