"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
30/7/16

இன்றைய உலகில் மோசடி என்பது எளிதில் நடக்க கூடிய ஒன்றாக உள்ளது. தினம் தினம் புதிய தொழில்நுட்பம் மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். உலகின் பிரபல ஆன்-லைன் நிறுவனமான ‘அமேசான்’ பெயரில் இணைய மோசடி ஒன்று பிரபலமாகி வருகிறது.

ஸ்மார்ட் போன் என்றாலே அனைவரும் ஒரு நிமிடம் கனவுலகிற்கு செல்வது போல மாய தோற்றம் ஒன்று உருவாகி வருகிறது. இதனை பயன்படுத்தி ஒரு மோசடி கும்பல், தகவல் திருட்டு முதல் பண திருட்டு வரை அனைத்து விதமான DATA (தகவல்கள்) களை திருடி அதிர்ச்சி அளித்து வருகின்றனர்.

அப்படி என்ன மோசடி அது? சமீபத்தில் நாம் நிறைய பகிர்ந்து வரும் ஒரு வாட்ஸ் அப் (WhatsApp) மெசேஜ் தான் அது. அதாவது ‘அமேசான்’ நிறுவனம் ரூ.14999 மதிப்புள்ள சாம்சங் j7 மொபைலை 97% தள்ளுபடியுடன் வெறும் ரூ.499க்கு விற்பனை செய்வதாக அந்த விளம்பரத்தில் உள்ளது. இதனை அனைவரும் ஆவலுடன் கிளிக் செய்தவுடன் நமது ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படுகிறது பின்னர் இந்த விளம்பரத்தை நமக்கு தெரிந்த 8 பேருக்கு அனுப்ப கோரிக்கை வருகிறது.

இவ்வாறு அனைவரும் செய்யும் பட்சத்தில் ஹக்கர் (Hacker) எனப்படும் தகவல் திருடர்கள், நம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போனை அவர்களது வசதிற்கு கொண்டு செல்கிறார்கள். பின்னர் தினம் தினம் நாம் சேகரிக்கும் நமது தகவல்களாகிய புகைப்படங்கள், வங்கி கணக்குகள் என அனைத்தும் கண்ணாடி போல் அவர்களுக்கு வெளிச்சமாகும். இதனை ‘அமேசான்’ பெயரில் செய்வதால் அவர்களுக்கு மேலும் நம்பிக்கை பிறக்கின்றது.

பேராசையால் நெருங்கியவர்களுகும், சுற்றதார்களுக்கும் செய்யும் இந்த தவறான ஒரு தகவல் பகிர்வு அவர்களிடம் நாம் நம்மை அடகு வைப்பது போன்றதாகும்.

thanks - News7Tamil

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.