Mohamed Farook Mohamed Farook Author
Title: எர்துகான் பேசிய தொலைபேசியை, அதிக விலைக்கு வாங்கும் சவூதியின் முயற்சி நிராகரிப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
துருக்கியில் இராணுவ சதிப்புரட்சியை முறியடிக்க ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் நாட்டு மக்களுக்கு வீதிக்கு இறங்க அழைப்பு விடுத்த கையடக்க ...
துருக்கியில் இராணுவ சதிப்புரட்சியை முறியடிக்க ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் நாட்டு மக்களுக்கு வீதிக்கு இறங்க அழைப்பு விடுத்த கையடக்க தொலைபேசியை சவூதி அரேபிய நாட்டவர் ஒருவர் ஒரு மில்லியன் சவூதி ரியாலுக்கு விலை கோரியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று இரவு இராணுவ சதிப்புரட்சி நிகழ்ந்துகொண்டிருக்கும் போதே எர்துவான் தொலைக்காட்சி ஊடே கையடக்க தொலைபேசி வழியாக வீடியோ மூலம் மக்களை வீதிக்கு இறங்க அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து வீதியில் திரண்ட மக்கள் கிளர்ச்சி செய்த இராணுவத்தினருக்கு எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து சதிப்புரட்சி முறியடிக்கப்பட்டது.

இவ்வாறு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட கையடக்க தொலைபேசியை கேட்டு சவூதி நாட்டவர் ஒருவர் துருக்கிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். இதன்போது அவர் குறித்த கையடக்க தொலைபேசியை 266,962 டொலர்கள் அல்லது ஒரு மில்லியன் சவூதி ரியாலுக்கு கேட்டுள்ளார்.

எனினும் அவரது கோரிக்கையை நிராகரித்திருக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர், அந்த தொலைபேசியை அருங்காட்சியகத்தில் வைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top