Mohamed Farook Mohamed Farook Author
Title: ரம்ஜான் நோன்பிருந்த சுவாதி: திருமாவளவன் கிளப்பும் சந்தேகம்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சுவாதி கொலை: புலனாய்வு துவங்கும் முன்பே பிலால் மாலிக் பெயர் வெளியானது எப்படி? திருமாவளவன் கேள்வி சுவாதி கொலையில் காவல்துறையினர் புலனாய...

சுவாதி கொலை: புலனாய்வு துவங்கும் முன்பே பிலால் மாலிக் பெயர் வெளியானது எப்படி? திருமாவளவன் கேள்வி

சுவாதி கொலையில் காவல்துறையினர் புலனாய்வைத் துவங்கும் முன்பே பிலால் மாலிக் பெயர் வெளிவந்தது எப்படி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், சுவாதி கொலை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
அதாவது, சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினர் புலனாய்வைத் தொடங்கும் முன்பே பிலால் மாலிக் மற்றும் ராம்குமார் பெயர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டது.

ஆனால், காவல்துறைக்கு தெரியவில்லை பிலால் மாலிக் யார் என்பது. ஒய்.ஜி. மகேந்திரன் பேஸ்புக்கில் ஒரு முஸ்லிம் என்றும், பிலால் மாலிக் என்றும் பெயர்களை வெளியிடுகிறார்.
இந்த பிலால் மாலிக் என்பவர் யார், அவரைப் பற்றிய தகவல்கள் ஏன் வெளியாகவில்லை என்று திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
அதோடு, சித்திக் பிலால் அல்லது மாலிக் என்பவர் சுவாதி கொலையில் தொடர்புடையவர் என்று தகவல் வருகிறது.

மேலும், ரம்ஜான் பண்டிகையின் போது சுவாதி நோன்பு இருந்ததாகவும், அவர் விரைவில் இஸ்லாமுக்கு மாறிவிடுவார் என்ற தகவல் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணையின் போது, ரத்தக் கரை படிந்த சட்டை ராம்குமார் தங்கியிருந்த அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது தற்போது மறுக்கப்படுகிறது. இதில் எது உண்மை?
மேலும், ராம்குமாரும் சுவாதியும் பேஸ்புக்கில் நட்பாகி, ராம்குமார் நெல்லையில் இருந்து சென்னை வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ராம்குமாரின் பேஸ்புக்கில் 2014ம் ஆண்டுக்குப் பிறகு எதுவுமே பதிவாகவில்லை. சுவாதி பற்றிய பதிவு எதுவும் இல்லை. அவர் சுவாதி பற்றி எதுவும் எழுதவில்லை.
சுவாதி கொல்லப்பட்டவுடன் சுவாதி என்று ராம்குமார் பேஸ்புக்கில் சர்ச் செய்திருக்கிறார். தனக்கு நன்கு அறிந்த ஒருவரைப் பற்றி அவர் ஏன் சர்ச் செய்கிறார்.
சுவாதிக்கும் ராம்குமாருக்கும் காதல் இருந்ததாக பேஸ்புக்கில் எந்த தகவலும் இல்லை.
சுவாதிக்கும் பிலாலுக்கும் நட்பு இருந்தது என்றும், சுவாதி கொலைக்குப் பின்னால் பிலால் மாலிக் என்பவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானதன் பின்னணி என்ன? உடனடியாக பிலால் மாலிக்கை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மேன்ஷனின் மேனேஜர் அல்லது உதவியாளர்கள் கூறுவது என்னவென்றால், காவல்துறை எங்கள் மேன்ஷனில் வந்து விசாரிக்கவில்லை. அப்பகுதியில் இருக்கும் அனைத்து மேன்ஷன் மேலார்களையும் காவல்நிலையத்துக்கு வரவழைத்துத்தான்  விசாரித்தார்கள் என்கிறார்கள்.
இத்தனை விஷயங்களையும் எவ்வாறு புறந்தள்ள முடியும்? அதனால்தான் சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார் திருமாவளவன்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top