காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: உலகின் மூன்று ஆட்சியாளர்களுக்கு அல்குர்ஆன் முழுமையாக மனனம் !! யார் அவர்கள்.?
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அல்குர்ஆனைச் சுமந்து அதனை நடைமுறைபடுத்திய முன்மாதிரி ஆட்சியாளர்கள். தற்போதைய உலகில் அல்குர்ஆனை முழுமையாக மன்னம் செய்து அதன்படி ஆ...
அல்குர்ஆனைச் சுமந்து அதனை நடைமுறைபடுத்திய முன்மாதிரி ஆட்சியாளர்கள்.

தற்போதைய உலகில் அல்குர்ஆனை முழுமையாக மன்னம் செய்து அதன்படி ஆட்சியும் செய்து காட்டிய, காட்டுகின்ற பெரும் தலைவர்கள்தான் இம்மூவரும் ஆவார்கள்.

1. சவுதி மன்னர் பைசல் பின் அப்துல் அஸீஸ்(1964-1975)

தனது‬ 16 வது வயதில் அல்குர்ஆனை முழுமையாக மன்னம் செய்தார். ஆக்கிரமிப்பு‬ நாடான இஸ்ரேலுடன் யுத்தம் செய்த ஒரேயொரு சவுதித் தலைவர். அமெரிக்க‬, நேட்டோ நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய மறுத்தவர்.

இஸ்லாமிய‬ உம்மத்துக்கு புது இரத்தம் பாய்ச்சி அதற்கு தைரியம் ஊட்டிய வீரத்தளபதி. அன்னாரின்‬ ஆட்சியைக் கண்டு அஞ்சிய சதிகார்ர்கள் 1975ம் ஆண்டு அவருடைய சகோதரன் ஒருவனைக் கொண்டு அவரைக் கொலைசெய்து ஷஹாத்த்தை பரிசளித்தார்கள்.

2.ஈஸா முஹம்மது முர்சி அய்யாத்(முன்னாள் எகிப்தின் ஜனாதிபதி 2012 – 2013)

‪‎அல்குர்ஆனை‬ முழுமையாக மன்னம் செய்த முதல் எகிப்திய ஜனாதிபதியும் பொறியியல் துறை பேராசிரியருமாவார். ‎எகிப்திய‬ வரலாற்றில் 2011 மக்கள் புரட்சியின் பின்னர் நடைபெற்ற முதலாவது ஜனநாயக முறையிலான ஜனாதிபதி தேர்தலில் 52 % மக்கள் விருப்போடு அதிபரானார்.

தனது ஆட்சிக்காலத்தில் நாளாந்தம் 18 மணித்தியாலங்கள் மக்களுக்காக சேவையாற்றியவர். அரச‬ மாளிகையில் வசிக்காமல் தனது குடும்பத்தாரோடு சாதாரண வாடகை வீட்டில் குடியிருந்தார்.

‪எகிப்தின்‬ 62% மக்கள் விருப்போடு ஷரீஆ அடிப்படையிலான அரசியலமைப்பை உருவாக்கினார். தனது மனைவி உட்பட ஐந்து குழந்தைகளை நாளாந்த குடும்ப பயிற்சியின் மூலமாக அல்குர்ஆனை முழுமையாக மன்னம்செய்ய வைத்தார்.

‪இவரது‬ நீதியான ஆட்சி முறையைக் கண்டு நடுங்கிய இஸ்லாத்தின் விரோதிகள் செய்த சதியினால் 2013 இல் பதவிகவிழ்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

3.பலஸ்தீன பிரதமர் , இஸ்மாஈல் கனிய்யா(2006 – இற்றைவரை)

‪‎காஸா‬ மக்களுக்கும் அதுபோல் முழு உலகுக்கும் தற்போது முன்மாதிரி ஆட்சியாளராக திகழ்பவர். இஸ்ரேலுக்கெதிரான‬ மிகச்சிறந்த ராஜதந்திரியும் திட்ட வகுப்பாளருமாவார்.

‪இஸ்ரேல்‬ இவரை பலமுறை கொலை செய்ய முயற்சித்தும் தோல்வி கண்டது
. ‎எளிமையான‬ , மக்களின் சேவகராக , பள்ளி இமாமாக, சிறந்த மார்க்க போதகராகராகவும் திகழ்பவர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top