Mohamed Farook Mohamed Farook Author
Title: துருக்கி மக்கள் சொல்லித்தந்த அரசியல் பாடம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
துருக்கி மக்கள் சொல்லித்தந்த அரசியல் பாடம்! முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான துருக்கியில் 1960-லிருந்து மூன்று முறை ராணுவ புரட்ச...
துருக்கி மக்கள் சொல்லித்தந்த அரசியல் பாடம்!
முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான துருக்கியில் 1960-லிருந்து மூன்று முறை ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது.

அதே போன்று நேற்றும் ராணுவம் அந்நாட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டதாக அறிவிப்பு செய்தது.
இந்த அறிவிப்பு வெளியான போது அந்நாட்டு அதிபர் எர்துகான் துருக்கியில் உள்ள கடற்கரை சுற்றுலா தலமான மர்மாரிஸ் எனும் பகுதியில் தங்கியிருந்தார்.

தனக்கு எதிரான துருக்கி ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு செய்தி கிடைத்ததும் சிறிதும் தாமதிக்காது,முகநூல்,வாட்சப் போன்ற சோஷியல் மீடியாவில் உங்களின் ஆட்சியை கவிழ்த்து உங்களுக்கு எதிராக கலகம் செய்யும் ராணுவத்தை நீங்களே ‘கவனித்து’ கொள்ளுங்கள் என்று மக்களிடம் கூறினார்.

துருக்கி அதிபரின் இந்த அறிவிப்பு கிடைத்த அடுத்த வினாடியே அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி ராணுவத்துக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு போராட்டம் நடத்தி சில மணி நேரத்திற்குள்ளாகவே ராணுவத்திடம் இருந்த அதிகாரத்தை கைப்பற்றி அதிபர் எர்துகானிடம் ஒப்படைத்தனர்.

மீண்டும் அங்கே மக்களாட்சி மலர்ந்து மக்கள் குதுகலமாக உள்ளனர்.மக்களாட்சிக்கு எதிராக கலகம் செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

துருக்கி மக்கள் நமக்கு சொல்லித்தந்த பாடம் இதுதான்:உங்களுக்கு எதிராக அதிகாரத்தின் அடக்குமுறை அதிகரிக்குமானால்…..ஒன்று பட்டு வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே உங்களுக்கான ஜனநாயக தீர்வு கிடைக்கும்.
அதிகார அடக்குமுறைக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பு எப்போது வேண்டுமானாலும் எங்கேயும் வெடிக்கலாம்?என்பதே தற்போதைய உலகின் நிலை.

வாழ்க துருக்கி மக்களின் ஜனநாயக போராட்டம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top