Mohamed Farook Mohamed Farook Author
Title: அதிக தண்ணீர்.. காலை உணவு முக்கியம்: ஆரோக்கிய வாழ்க்கைக்கான வழிகள்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நாம் ஒவ்வொருவரும் சுகாதாரத்தை கடைபிடிக்கசர்வதேச அமைப்பு ஐந்து வழிகளை விழிப்புணர்வாக வலியுறுத்துகிறது. Do not skip Breakfast (காலை உணவை ...
நாம் ஒவ்வொருவரும் சுகாதாரத்தை கடைபிடிக்கசர்வதேச அமைப்பு ஐந்து வழிகளை விழிப்புணர்வாக வலியுறுத்துகிறது.
Do not skip Breakfast (காலை உணவை தவிர்க்காதீர்கள்)
நம்மில் பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்பவர்கள் உள்ளனர். அவசரமாக பள்ளிக்கும் பணிக்கும் செல்பவர்கள். விரதம் காரணமாக தவிர்ப்பவர்கள். டீ, காபி போன்ற பானங்கள் எதாவது அருந்திவிட்டு காலை உணவை மதியத்துக்கு தள்ளிப்போடுபவர்கள். காலை உணவின் அவசியத்தை உணர வேண்டும்.

காலை உணவுதான் அந்தநாள் முழுதுக்குமான சக்தியை அளிக்க வல்லது. மேலும், காலை உணவு தான் உடலில் சர்க்கரை அளவையும், எடை இழப்பையும் தடுக்கிறது. காலை உணவை தவிர்ப்பவர்கள் உடலாடிப்போய் சீக்கிரத்தில் நோயாளி ஆகிவிடுகின்றனர்.

Drink Plenty ofWater (அதிக தண்ணீர் குடியுங்கள்)
தண்ணீர் அருந்துவது பற்றிய அக்கறை இல்லாதவர்கள் உடல் பாதிக்கப்படுகின்றனர். ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.
நம் உடலில் தீங்கான உப்புகள், விஷத்தன்மையான ரசாயனங்கள் இருந்தாலும் அதிக தண்ணீர் அருந்துவதால், வியர்வையாகவும் சிறுநீராகவும் எளிதாக வெளியேற்றப்படுகிறது.
ரத்த ஓட்டமும் சுத்திகரிப்பும் சீராக இருப்பதால் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

Eat Healthy Food (ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுங்கள்)
பழங்கள் நிறைய சாப்பிடலாம். அனைத்து விதமான காய்கறிகள், தானியங்கள், மற்றும் புரோட்டின் நிறைந்த உணவுகளான மீன், கோழி, பீன்ஸ் போன்றவையும் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானது.

Enough Sleep (அளவான தூக்கம்)
முதல் நாள் போல அடுத்த நாளும் நம்மை புத்துணர்வோடு செயல்பட வைப்பது இடையில் வரும் இரவில் நாம் கொள்கிற தூக்கம் தான்.அந்த தூக்கம் இல்லையேல் அடுத்த நாள் துக்கம்தான்.
குறைந்தது ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது ஆழ்ந்த தூக்கம் கொண்டால் தான் நமது உடலும் மனமும் உற்சாகமுடன் இருக்கும்.
எல்லா விடயங்களுக்கும் ஏதாவது ஒரு மாற்று இருக்கும் ஆனால், தூக்கத்துக்கு நிகர்தூக்கம் தான் ஓய்வை கூட ஒப்பிட முடியாது. மனதை சுதந்திரமாக விட்டுவிட்டு நாம்படுத்தால் போதும் ஆழ்ந்த தூக்கம் நம்மை தழுவ காத்திருக்கும்.

Exercise (உடற்பயிற்சி)
நமது அன்றாட வேலைகளுக்கு ஏற்ப ஏதவது உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. தசையை வலிமைப்படுத்தும் கடினமான வெயிட் லிப்ட்பயிற்சிகள் அவசியமில்லை.
கை,கால்களை வீசி செய்யும் கருவிகள் இல்லாத பயிற்சியே போதுமானது. தினம்அரை மணிநேரம் நடந்தால் கூட சரியே.
அதனால்,ரத்த ஓட்டம் துரிதப்படும். கழிவுகள் சரியாக வெளியேற, நல்ல பசி, தூக்கம் பெற, கொழுப்புகரைய, கலோரிகள் செலவாக உதவும். உடற்பயிற்சியால்,எந்த வயதிலும் இளமை வேகத்துடன் செயல்பட முடியும்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top