Mohamed Farook Mohamed Farook Author
Title: தண்ணீரிலும் செல்லும் வகையில் உலகின் பெரிய விமானத்தை உருவாக்கும் சீனா!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தண்ணீரிலும் செல்லும் வகையிலான விமானத்தை (AG 600), சீன விமானப் போக்குவரத்துத் துறை தயாரித்து வருகிறது. காட்டுத் தீயை விரைந்தும் முழுமையா...
தண்ணீரிலும் செல்லும் வகையிலான விமானத்தை (AG 600), சீன விமானப் போக்குவரத்துத் துறை தயாரித்து வருகிறது.
காட்டுத் தீயை விரைந்தும் முழுமையாகவும் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக நீர்நிலைகளில் இறங்கி நீரை அள்ளிக்கொண்டு தேவையான இடங்களில் தெளிக்கும் வகையில் ஒரு விமானத்தைச் சீனா வடிவமைத்துக் கட்டி வருகிறது.

சீனாவின் சுகாய் நகரில் உள்ள விமானப் போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான பணிமனையில் இதற்கான வேலை மும்முரமாக நடைபெறுகிறது. வெளிப்புற வேலைகள் முடிந்த நிலையில் உட்புற வடிவமைப்பில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தரையிலும், தண்ணீரிலும் இறங்கி, மேலெழும்பும் திறன் பெற்றுள்ள இந்த விமானம் தண்ணீரில் இறங்கும்போது அதன் அடிப்பகுதியில் உள்ள கொள்கலனில் தண்ணீர் நிரப்பிக்கொள்வதுடன், தண்ணீரிலேயே ஓடி மேலெழும்பிப் பறந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த ஆண்டு இறுதியில் பணி முடிந்து விமானம் இயக்கத்துக்கு வரும் எனச் சீன விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. தண்ணீரிலும் செல்லும் 17 விமானங்கள் வாங்குவதற்கு இதுவரை கொள்முதல் ஆணைகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top