காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஜாகீர் நாயக்கின் நடவடிக்கைகளை விசாரிக்க வேண்டும்: ஆசம் கான்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஜாகீர் நாயக்கின் நடவடிக்கைகளை விசாரிக்க மத்திய அரசு குழு அமைக்க வேண்டும்: ஆசம் கான் இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக்கின் நடவடிக்கைகளை...
ஜாகீர் நாயக்கின் நடவடிக்கைகளை விசாரிக்க மத்திய அரசு குழு அமைக்க வேண்டும்: ஆசம் கான்

இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக்கின் நடவடிக்கைகளை விசாரிக்க குழு ஒன்றினை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தர பிரதேசத்தின் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மற்றும் மந்திரியான முகமது ஆசம் கான் கூறியுள்ளார்.

டாக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு நாயக்கின் பேச்சு தூண்டுதலாக அமைந்தது என தகவல்கள் வெளியான நிலையில் அவரது பேச்சுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் சயானா நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கான் பேசும்பொழுது, நாயக்கின் நடவடிக்கைகளை விசாரிப்பதற்காக மத்திய அரசு குழு ஒன்றினை அமைக்க வேண்டும். 

தேச விரோத செயல்களில் அவர் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
அதேவேளையில், வருகிற சட்டசபை தேர்தலில் அஜித் சிங் தலைமையிலான ராஷ்டீரிய லோக் தளத்துடனான தேர்தல் கூட்டணி குறித்து கேட்டதற்கு கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று கான் பதிலளித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top