Mohamed Farook Mohamed Farook Author
Title: ஐக்கிய அமீரக பிரதமரும்-மகனும் மக்களோடு மக்களாக ரெயில் பயணம்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இங்கிலாந்தில் பொதுமக்களோடு இணைந்து ஐக்கிய அமீரக பிரதமரும் அவரது மகனும் ரெயில் பயணம் மேற்கொண்டனர். ஐக்கிய அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் ...
இங்கிலாந்தில் பொதுமக்களோடு இணைந்து ஐக்கிய அமீரக பிரதமரும் அவரது மகனும் ரெயில் பயணம் மேற்கொண்டனர்.

ஐக்கிய அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத், அவரது மகனும் இளவரசருமான ஷேக் ஹம்தான் பின் முகமது  இருவரும் இணைந்து லண்டனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சுரங்க ரெயிலில் பயணம் மேற்கொண்டனர்.

கொளுத்தும் வெயில் கூட்ட நெரிசல் எதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுடன் இணைந்து இருவரும் பயணம் மேற்கொண்டது சமூக வலைப்பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது அவ்வப்போது புகைப்படமெடுத்து  சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டிருந்தார். இந்த ரெயில் பயணத்தின் சிறப்பு என்னவெனில் இருவருமே அரேபிய உடையில் இல்லாமல் சாதாரண உடையில் பொதுமக்களுடன் இணைந்து பயணம் மேற்கொண்டதுதான்.

ஷேக் முகமது பின் ரஷீத்தின் சொத்து மதிப்பு 4 பில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என கூறப்படுகிறது.
பாரம்பரிய அரபு நாட்டு உடையுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா மேற்கொள்ளும் நபர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதால், அரேபிய சுற்றுலாப்பயணிகளை அந்தந்த நாட்டுக்கேற்ற உடைகளை பயன்படுத்த ஐக்கிய அமீரகம் கேட்டு கொண்டு உள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top