"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/7/16

இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் பாலியல் குற்றங்களும் மலிவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான இரண்டு காரணங்கள்- திருமணத்தைக் கடினமாக்கியதும் திருமணத்தை தாமதமாக்கியதும்தான்…!

சகோதர சமுதாயங்களில் இந்த நிலைதான் இன்று அதிகம் காணப்படுகிறது.
ஓர் ஆண்மகன் இன்றைய சூழலில் 27, 28 ஏன் 30 வயது வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது திருமணத்திற்கு. படிப்பு முடிய வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், கை நிறைய சம்பளம் வரவேண்டும், வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகுதான் கல்யாணம் என்று பல காரணங்கள்..

இதனால் கடுமையான பாலியல் வறட்சியால் ஏங்கிப் போய்விடுகிறான்.
அதே போல்தான் பெண்களும். வரதட்சணையுடன் படித்த, வேலைக்குச் செல்லும் பெண்தான் வேண்டும் என்று மணமகன்கள் பிடிவாதம் பிடிப்பதால் பெண் படித்து முடித்து, வேலை கிடைத்து, இரண்டு மூன்று ஆண்டுகள் சம்பாதித்து, அந்தப் பணத்தைச் சேமித்து வைத்து, அதற்குப் பிறகு மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் முடிவதற்குள் கிட்டத்தட்ட அவளும் 26, 27 வயதை எட்டிப் பிடித்து முதிர்கன்னி ஆகிவிடுகிறாள். அவளும் மனுஷிதானே…உணர்ச்சிகள் இருக்காதா என்ன?

திருமணம் கடுமையாவதும் திருமணம் தாமதம் ஆவதும்தான் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் பெருகவும் வன்கொடுமைகள் நிகழவும் முக்கிய காரணங்கள்.

25 வயதிற்குள் ஆண்மகனுக்குத் திருமணம் முடிக்காவிட்டால் அது அவன் மீது இழைக்கப்படும் கொடுமை.
22 வயதுக்குள் பெண்ணுக்குத் திருமணம் முடிக்காவிட்டால் அது அவள் மீது இழைக்கப்படும் கொடுமை.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்-
“திருமணத்தை எளிதாக்குங்கள்.
திருமணத்தை விரைவாக்குங்கள்.”
நபிகளாரின் இந்த வழிமுறை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் கணிசமாகக் குறைந்துவிடும்.
-சிராஜுல்ஹஸன்
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.