"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
26/7/16

ஜெட்டா: பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கும் மத பிரசாரகர் ஜாகீர் நாயக், சவுதியில் தங்கி இருக்கிறார். இவரை இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர் பேட்டி எடுத்துள்ளார்.

இந்த பேட்டியில் நிருபர் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு நாயக் பதில் கூறியுள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: மீடியாக்கள் தான் என்னை பயங்கரவாதியாக சித்தரிக்கிறது. நான் எப்போதும் வன்முறை தூண்டல் பேச்சு பேசியது கிடையாது. எப்போதும் மனித நேயத்தை வலியுறுத்தியே பேசியுள்ளேன்.

வங்கதேச பயங்கரவாதி எனது ரசிகன் என்று தான் கூறியுள்ளான். இதில் என்ன தவறு இருக்கிறது ? ஆனால் இந்திய மீடியாக்கள் என்னை பற்றி தவறாக சித்தரிக்கிறது. இதனை நிறுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். நான் யாருக்கும் பயப்பட தேவையில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதி ஜாகீர் நாயக் பேச்சை கேட்டு இவ்வாறு மாறியதாக கூறியிருந்தான். இதனையடுத்து மத்திய அரசு ஜாகீர் நாயக் தொடர்பான விஷயங்களை தீவிர விசாரித்து வருகிறது. உரிய நேரத்தில் இந்தியா திரும்பாமல் அவர் இன்னும் சவுதியில் தங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.