vkrnajur vkrnajur Author
Title: இரண்டு தினங்களில் பெருநாள் கொண்டாடுவது : ” முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நிலவிவரும் ஒரு வகையான கொள்கை!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
புனித நோன்பு நம்மை விட்டுப் பிரிவதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கிறது. இந்நிலையில் பெருநாளை எதிர்பார்த்தவர்களாக அவற்றுக்கான ஏற்பாட...
புனித நோன்பு நம்மை விட்டுப் பிரிவதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கிறது. இந்நிலையில் பெருநாளை எதிர்பார்த்தவர்களாக அவற்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்பவர்களாக நோன்பு நோற்றவர்களும, நோற்காதாவர்களும் இறங்கியிருப்பதை முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேச ஜவுளிக்கடைகளை அவதானிக்கின்றபோது புரிய முடிகிறது.
இத்தகைய பெருநாளுக்கான ஏற்பாடுகளின் மத்தியில், ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை உள்நாட்டில் கண்டு பெருநாள் கொண்டாடுவதா அல்லது சர்வதேச ரீதியில் சவூதி அரேபியாவில் காணும் பிறையின் அடிப்படையிலா பெருநாள் கொண்டாடுவது என்ற பேச்சுக்கள்; இந்நாட்களில் பேசப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பிறை காண்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நிலவிவரும் ஒரு வகையான கொள்கை நோயியானது ஒற்றுமையற்ற சமூகம் என்ற இழிநிலையை சுமத்தியுள்ளதுடன் சந்தி சிரிக்கவும் செய்திருக்கிறது.
பல்லின சமூகங்களைக் கொண்ட மக்கள் வாழும் இந்நாட்டில், முஸ்லிம் சமூகத்தைத் தவிர்ந்த ஏனைய எந்தவொரு சமூகமும் தங்களது திருநாட்களைக் கொண்டாடுவதில் முரண்பட்டதான வரலாற்றைக் காண முடியாதுள்ளது.
ஆனால், பெருநாள் கொண்டாடுவதிலும் அதற்கான தினத்தை தீர்மானிப்பதிலும் தங்களுக்குள் முரண்பட்டுக்கொள்ளும் ஒரு சமூகம் என்றால் அது முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள் என்ற வராலாற்றுப் பதிவு முஸ்லிம்கள் தொடர்பில் பதியப்பட்டிருக்கிறது.
கடந்தகாலங்களும் பெருநாள்களும்.
நோன்பை நோற்பதிலும் பெருநாட்களைக் கொண்டாடுவதிலும் கடந்த காலங்களில் ஒன்றுபட்ட நிலை காணப்படவில்லை. சமூக ஒற்றுமைக்கு அப்பால் கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி அதற்கான ஆதரங்களை தங்கள் வசம் வைத்துக்கொண்டு, கொள்கைகளை விட்டுக்கொடுக்காது செயற்பட்டு ஒட்டுமொத்த சமூகத்தினதும் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்திய கசப்பான நினைவுகளை இங்கு ஞாபகமூட்டுவது அவசியமாகவுள்ளது.
இச்செயற்பாடுகள் முஸ்லிம்களின் மத்தியில் ஒற்றுமையின்மையை உருவாக்கி பல்வேறு தளங்களிலும்; விமர்சிக்கப்படுவதற்கும் கேள்விக்குட்படுத்தப்படுவதற்கும் காரணங்களாக அமைந்தன. முஸ்லிம்களின் பலவீனத்தைப் தங்களுக்குச் சாதகமாக, தங்களின் பக்கத்தைப்; பலப்படுத்துவதற்காக இஸ்லாத்தின் எதிரிகள், முஸ்லிம்களின் துரோகிகள் திட்டமிட்டுச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அது நமது கொள்கைவாதிகளுக்கு ஒரு பொருட்டாகக் தென்படுவதில்லை.
அரசியல் ரீதியாகவும,; கோட்பாடு ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், இயக்கங்கள் ரீதியாகவும் இன்னும் பல்வேறு கோணங்களில் ஒற்றுமை இழந்து செயற்படுவது சமூக ஆரோக்கியத்துக்கு எப்போதும் பாதகமாகவே அமையும் என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டியது அவசியமாகவுள்ளது.
சமூகத்தின் கட்டுக்கோப்பை உடைத்து, அதைக் கேவலப்படுத்தி ஏனைய சமூங்களின் பார்வையில் ஒரு மலினமான எண்ணங்களைத் தோற்றுவித்து தொடர்ந்தும் சமூகத்தின் நிலை இதுதான் என்பது போன்றதொரு கருத்தியலை சகோதர இன மக்கள் மத்தியில் தோற்றச் செய்திருக்கிறார்கள். சமூகம் இழிவுபடுத்தப்பட்டாலும், சமூகத்தின் நிலையைப் பார்த்து சந்தி சிரித்தாலும்;, கொள்கை வெற்றி பெற வேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக இருந்திருக்கிறார்கள். தொடர்ந்தும்
இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை பல சம்பவங்கள் இன்னும் புடம்போட்டுக் கொண்டிருக்கிறது.
இவர்கள் மனங்களில் ஏற்றுக்கொள்ளும், விட்டுக்கொடுக்கும,; புரிந்து கொள்ளும் மனப்பாங்கு உருவாக வேண்டும். அந்த நேர்மறை மனப்பாங்கை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
சமூக ஒற்றுமைக்காக முழு நோன்பு நாட்களிலும் இப்தார் வைபவம் நடத்தியும் தங்களுக்குள் ஒற்றுமைப்படாது வாழும் நிலை முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது.
நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டுள்ள சகல இயக்கங்கைளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள பிறைக் குழுவின் பெருநாள் தொடர்பான முடிவுக்கு மாறாக பிளவுபட்டு கடந்த காலங்களில் இரு தினங்கள் பெருநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது.
நோன்பும் ஹஜ்ஜும் தவிர்ந்த ஏனைய மாதங்குளுக்கு பிறைக்குழு பிறை தொடர்பில் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள முடியுமென்றால், அது தொடாப்pல் அலட்டிக்கொள்ளாது இருக்க முடியுமென்றால் இருபெருநாட்கள் தொடர்பிலும் நோன்பு தொடர்பிலும் பிறைக்குழு எடுக்கும் முடிவில் வருடாவருடமாக சந்தேகத்தை ஏற்படுத்துவது நியாயமா? மக்களைக் குழப்புவது நீதியா? ஏன்ற கேள்விகள் ஒவ்வொருவரினது உள்ளத்திலிருந்தும் எழுப்பப்பட வேண்டும்.
இவ்விடயத்தில் பிறைக்குழுவாக அல்லது பிறையைத் தீர்மானிப்பதில் அங்கத்துவம் வகின்றவர்களாகச் செயற்படுகின்றவர்கள் உணர்வுகளோடு விளையாடாமலும நடந்து கொள்வது அவசியமாகும். கடந்த காலங்களில் பிறைபார்ப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் முஸ்லிம் சமூகம் குறித்து சந்தி சிரித்தது. இந்நிலை இவ்வாண்டிலும் பெருநாள் தினத்தை அறிவிப்பதில்; ஏற்பட்டுவிடக் மூடாது என்பதே சமூக ஒற்றுமையை விரும்பும் மக்களின் பிரார்த்தனையாகவுள்ளது.
ஒரு ஊரின் ஒற்றுமையை அல்லது ஒரு சமூகத்தின் ஒற்றுமையை சீர் குழைப்பது கொலை செய்வதற்குச் சமம் என்ற அண்ணல் நபியின் திருவாக்கு சமூக ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் அறிக்கையிடும் ஒரு சிலரின் அறிவுக்கு எட்டவில்லையா? ஒரு சில உலமாக்கள் கற்று வெளியேறிய மத்தரஸாக்களில் போதிக்கப்படவில்லையா என்ற கேள்விகள் கடந்த காலங்களில் எழுப்பப்பட்டன.
கொடுக்கல் வாங்கல்களில் இஸ்லாத்தை சரிவர பேணுவதில்லை, குடும்ப வாழ்க்கையில் பூரண இஸ்லாம் இல்லை. அவ்வாறான நிலையில், ஒரு பெருநாளைக் கொண்டாடுவதில் இஸ்லாத்தை முழுமையாகக் கடைபிடிப்பவர்களாகக் காட்டிக்கொண்டு சமூகத்தைச் சந்திசிரிக்க செய்வது நியாயமாகாது. இவை முஸ்லிம் சமூகத்திடையே பிளவைத் தோற்றுவித்து, இஸ்லாத்தைக் கேவப்படுத்தும் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தீனி போடுவதாக அமையும் என்பது ஞாபகத்திலிருக்க வேண்டியதொன்றாகும்.
அத்தோடு, பிரிவினைகள், ஏற்றுக்கொள்ளாத, விட்டுகொடுக்காத மனப்பாங்குகள் நம்மை மட்டும் மாத்திரமின்றி நமது எதிர்கால சந்ததிகளையும் பாதிக்கும் என்பதை மனதில் நிறுத்திச் செயற்படுவது காலத்தின் அவசியமாகவுள்ளது.
நாம், நமது மனப்பாங்குகளை மாற்றிக்கொள்வதன் மூலம் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் மாற்றிக்கொள்ள முடியும். ஒவ்வொரு தனிநபரும் ஒரு குழுவின,; ஒரு சமூகத்;தின் அங்கத்தவராகிறார். அந்தவகையில், ஓவ்வொரு தனி மனிதனும் தமது மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தி மாறுகின்றபோது அவர் அங்கம் வகிக்கும் குழுவிலும், இயக்கத்திலும் அவன் சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஒரு சமூகம் தங்களை மாற்றிக்கொள்ளாத வரையில் இறைவன் அச்சமூகத்தை மாற்றமாட்டான் என இஸ்லாம் வலியுறுத்திக் கூறிக்கொண்டிருக்கிறது.
இருபதான் நூற்றாண்டில் வாழ்;ந்த உளவியல் தத்துவ அறிஞர் லியோ டால்ஸ்டாய் கூறுவது போன்று ‘ஒவ்வொரு மனிதனும் உலகத்தை மாற்ற வேண்டும் என நினைக்கிறான். ஆனால் ஒருவர் கூட தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமென நினைப்பதில்லை.’ இவைதான் இன்றைய முஸ்லிம்களின் நிலையாகவும் உள்ளது.
முஸ்லிம்; இச்சமூகத்தின் ஒற்றுமையை சீர்குழைத்து சின்னாபின்னமாக்கும் ஒரு சிலரின் நிலையும் இவ்வாறுதான் காணப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். ஒரு பெருநாள் கொண்டாடுவதில் பிளவுபட்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் கேவலப்படுத்தும் நிலை இவ்வாண்டிலும் ஏற்பட்டுவிடக் கூடாது. பிறைபார்ப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் சமூக ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் இக்காலத்தின் தார்மீகப் பொறுப்பாகவுள்ளது.
பொறுப்பட்ட செயற்பாடுகளை பொறுப்புள்ள செயற்பாடுகளாக மாற்றி சமூக ஒற்றுமையை வெளிப்படுத்துவது காலத்தின் முக்கிய தேவையாகவுள்ளது. மாறாக, பெருநாள் தினத்தைக் கொண்டாடுவதிலும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதிலும் சமூகம் விமர்சிக்கப்படும் நிலைக்கு இட்டுச் செல்லப்படக் கூடாது. தனித்துவமிக்க கலாசார விழுமியங்களைக் கொண்ட ஒரு இனம் என்ற அடிப்படையில், சமூகத்தின் தெரிவுகள் அமைய வேண்டும். குறிப்பாக பெருநாளுக்கான ஆடைத் தெரிவில் வரையறைகளை மீறாது இருப்பது தனித்துவத்தைப் பாதுகாப்பதாக அமையும்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top