Mohamed Farook Mohamed Farook Author
Title: காஷ்மீர் அது கண்ணீர் தேசமானது. அரசியல் கட்சிகள் அங்கு என்ன செய்கிறது?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களில் கஷ்மீரில் அமைதி திரும்புவதை விட அதை தணலாகவே வைத்திருக்க விரும்பியது என்பதே உண்மை. மத ரீதியாக ஹிந்து...
காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களில் கஷ்மீரில் அமைதி திரும்புவதை விட அதை தணலாகவே வைத்திருக்க விரும்பியது என்பதே உண்மை.

மத ரீதியாக ஹிந்துக்களின் ஓட்டை வாங்க காஷ்மீரை கிளர்ச்சி தேசமாகவும், பாகிஸ்தான் ஆதரவு பகுதியாகவும் காண்பித்து வெருப்பு அரசியலால் ஓட்டு வாங்க விட்டு வைத்தது என்பதே உண்மை.

குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் முனைப்புடன் முயன்றிருந்தால் பிரச்னை முடிந்திருக்கும். ஆனால் அவரோ காஷ்மீரி என்பதை விட காங்கிரஸ்காரர் என்பதையே விரும்பினார்.

பரூக் அப்துல்லாஹ். அவருக்கு எதுவும் பொருட்டில்லை. பதவி இருந்தால் போதும். அவர் மருமகன் சச்சின் பைலட் என்பதே பல விளக்கங்களை சொல்லாமல் சொல்லும்.

முப்தி சயீத். காங்கிரசை எதிர்க்க பிஜேபியை தொட்டு பாவம் செய்தவர். அவர் மகள் மஹ்பூபா அதை தொடர்கிறார். அவரின் போலீஸ் செய்யும் அக்ரமங்களை கூட தடுக்க இயலாதவர்.

பிஜேபி என்பது பொய்யை மிகைப்படுத்தி உண்மையை உருத்தெரியாமல் சிதைக்கும் கட்சி என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள், 370 வது பிரிவு சட்டத்தை சர்ச்சையாக்கிய போது ஒரு சில வரி பதில்களில் அதை உடைத்தெரியும் சக்தி பெற்றிருந்த காங்கிரஸ், மௌன வேடிக்கை பார்த்தது. காவிக்கூட்டம் முஸ்லிம்களை எதிர்த்தால் முஸ்லிம்கள் நமக்கே ஓட்டளிப்பார்கள் என்று சிந்தித்தார்கள்.

விளைவு? ஆட்சிக்கு வந்த பிஜேபி காஷ்மீரிலும் கூட்டணி ஆட்சியில் ஏறியதால் வந்தது வினை.
சிந்திப்போம். வழி திறக்கும்.
மௌலவி ‪M.Y.முஹம்மது அன்சாரி

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top