vkrnajur vkrnajur Author
Title: திருவண்ணாமலையில் போலிசார் அத்துமீறல் தாய்,தந்தை மகன் அடி உதை!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தாய், தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தாய், தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொக்காவாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா, அவரது மனைவி உஷா, மகன் சூர்யா ஆகியோர் உறவினர் திருமணத்துக்கு நகை வாங்குவதற்காக செங்கம் பஜார் வீதிக்கு சென்றுள்ளனர். நகை எடுக்க பணம் போதாததால் ராஜாவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் விசாரணை ஏதுமின்றி அவர்களை அடித்து துரத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்களை காவலர்கள் முருகன், விஜயகுமார், நம்மாழ்வார் ஆகியோர் நடு ரோட்டில் வைத்து மிருங்கங்களை அடிப்பது போல் அவர்களை அடித்து உதைத்தனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். தாக்குதலை வேதனையுடன் தட்டிக்கேட்ட பொதுமக்களையும் காவலர்கள் விரட்டி அடித்தனர். போலீசார் தாக்கியதில் காயம் அடைந்த மூன்று பேரையும் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லாமல் காவல் நிலையத்தில் அடைத்து வைத்து மீண்டும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் பலரது முன்னிலையில் நடந்த காவல்துறையினரின் அத்துமீறல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் போலீசார் மிரட்டியதால் பரபரப்பு நிலவியது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top