Mohamed Farook Mohamed Farook Author
Title: இந்திரா காந்தி, கலாமுக்கு இரகசியமாக நிதி ஒதுக்கியது ஏனென்று தெரியுமா..?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இந்தியா தனது மிகவும் பிரபலமான ஜனாதிபதியான திரு. ஏபிஜே அப்துல் காலம் அவர்களை கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதியன்று ஷில்லாங்கில் இழந்தது. ...
இந்தியா தனது மிகவும் பிரபலமான ஜனாதிபதியான திரு. ஏபிஜே அப்துல் காலம் அவர்களை கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதியன்று ஷில்லாங்கில் இழந்தது. 'மக்களின் ஜனாதிபதி' என்று அன்போடு அழைக்கப்பட்ட அப்துல் கலாம், 11-வது மாநில தலைவராகவும் பணியாற்றியுள்ளார் (2002-2007). முதலில் அவரொரு விஞ்ஞானி, பின்பு தான் அரசியல் துறைக்குள் நுழைந்து வெளியேறினார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது..!
அப்படியாக , நம்மையெல்லாம் கனவு காண சொல்லி நமது ஒட்டுமொத்த கனவுகளின் நாயகனாக திகழும் அப்துல் கலாம் ஐயாவிற்கு 'மிஸைல் மேன் ஆப் இந்தியா' (Missle Man of India) என்ற பட்டமொன்றும் உண்டு, 'இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்ற பெயர் அவருக்கு சூட்டப்பட என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா..?! குறிப்பாக இந்திரா காந்தி, அப்துல் கலாமுக்கு இரகசியமாக நிதி ஒதுக்கிய காரணம் என்னவென்று தெரியுமா..?
'இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்ற புகழை அடைய அப்துல் கலாமின் பள்ளி வாழ்க்கை தொடங்கி பல அணு சோதனைகள் வரை எல்லாமே காரணம் தான்..!
எல்லாமே காரணம் தான் :
பள்ளி படிப்பில் கணிதத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்த அப்துல் கலாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். அதன் பின்னர் அவர் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலில் ஆய்வு பயின்றார்.
விண்வெளி பொறியியலில் ஆய்வு :
பின்பு டி.ஆர்.டி.ஓ-வில் (DRDO) பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையமத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றினார்.
பாதுகாப்பு மற்றும் விண்வெளி :
தொடக்கத்தில் சிறிய ஹோவர்கிராஃப்ட் ஊர்திகளை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்ட காலம் பின்பு சுதந்திரமான மற்றும் விரிவான ராக்கெட் திட்டத்தில் ஈடுபட்டார்.
ராக்கெட் திட்டம் :
பின்பு 1969-ல் அவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் பணியாற்ற அழைக்கப்பட்டு இந்தியாவின் முதல் எஸ்.எல்.வி ( எஸ்.எல்.வி -III) திட்டத்திற்கு தலைவராக்கப்பட்டார்.
இஸ்ரோ :
20 ஆண்டுகளுக்குள் எஸ்.எல்.வி (பி.எஸ்.எல்.வி.) மற்றும் எஸ்எல்வி-3 திட்டங்களை வெற்றிகரமாக மேம்படுத்தி காட்டினார் டாக்டர் கலாம்..!
பி.எஸ்.எல்.வி :
1970-களில் எஸ்.எல்.வி திட்டத்தின் தொழில்நுட்பம் பயனபடுத்தி இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ( ballistic missiles) திட்டங்களையும் வெற்றிகரமாக இயக்கினார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை :
அந்த இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை எதிர்ப்பு கிளம்பியதால் அப்போதைய அதிகாரமான இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மூலம் ரகசியமாக நிதிகள் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரகசிய நிதிகள் :
பின்பு விரைவான இயக்கத்தின் போது நடுக்கம் கொள்ளும் ஏவுகணை சார்ந்த முன்னேற்ற திட்டத்தில் (development of a quiver of missiles) பணியாற்றினார்.
முன்னேற்ற திட்டம் :
அதனை தொடர்ந்து ரூ.388 கோடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டம் (Integrated Guided Missile Development Programme -IGMDP) தொடங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டம் :
அந்த திட்டத்தின் கீழ் இந்தியாவின் மிக வலிமையான ஏவுகணைகளான அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகள் அப்துல் கலாம் தலைமையின் கீழ் உருவாக்கம் பெற்றது.
அக்னி மற்றும் பிருத்வி :
அப்துல் கலாம் இந்திய பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராக பணியாற்றியதுடன், போக்ரான் - 2 அணு சோதனை திட்டத்தின் தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.
போக்ரான் - 2 :
பாரத் ரத்னா விருது பெற்ற அப்துல் கலாம், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 1998-ம் ஆண்டு நிகழ்ந்த அணு ஆயுத சோதனைகளில் ஒரு முக்கிய பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது..!
அணு ஆயுத சோதனை :
மிகப்பெரிய ஊடகச்செய்தியான போக்ரான்-2 திட்டத்திற்கு பின்பு தான் கலாம் ஒரு நன்கு அறியப்பட்ட அணு விஞ்ஞானியாக பிரபலமானார். பின்பு ஒட்டுமொத்த இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்ற உச்சகட்ட புகழையும் பெற்றார்..!
அணு விஞ்ஞானி :
 செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top