Mohammed Farook Mohammed Farook Author
Title: அண்ட்ராய்டு அறிஞர்கள்! ஒன்றும் அறியா அப்பாவி முஸ்லிமை பெரிய அறிஞர் போலவும்,…
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அண்ட்ராய்டு தொலை பேசியின் வருகை பல வசதிகளை மனிதனுக்கு தந்திருந்தாலும் மக்களின் தவறான புரிதல், தவறான கருத்தாளுமை, பொய்யை பரப்புதல், குறிப...
அண்ட்ராய்டு தொலை பேசியின் வருகை பல வசதிகளை மனிதனுக்கு தந்திருந்தாலும் மக்களின் தவறான புரிதல், தவறான கருத்தாளுமை, பொய்யை பரப்புதல், குறிப்பாக இஸ்லாமிய வட்டத்தோடு பார்த்தால் ஒன்றும் அறியா அப்பாவி முஸ்லிமை பெரிய அறிஞர் போலவும், பெரிய சிந்தனையாளர், ஆய்வாளர் போலவும் ஆக்கியுள்ளது.

உதாரணமாக ஒருவர் தனது கருத்துக்கு மாற்றமாக அல்லது தான் விளங்கியதற்கு மாற்றமாக (குழுமத்தில்) வரும் தகவலை பார்த்துவிட்டு, அதே அண்ட்ராய்டு தொலைபேசியில் நல்லதையும், தீயதையும் சுமந்துள்ள கூகுள் ராஜாவிலோ, அல்லது யூடியுப் மங்கையிடமோ அல்லது வேறு குழுமத்திலோ தனது கருத்துக்கு வலுசேர்க்கும் செய்திகளை தேடுகிறார், தான் கஷ்டப்பட்டு தேடிய செய்திகளை தான் தவறாக விளங்கியது போலவே மற்றவர்களும் விளங்குவார்கள் என்று எண்ணி அனுப்புகிறார்…, கடைசியில் எந்த முடிவுக்கும் இருகருத்தாளரும் வரமுடியாத நிலையில் அது அப்படியே நிற்கின்றது.

ஒரு நூலை ஒருவன் முழுமையாக வாசிக்கும்போது அவனது தவறான புரிதல் ஐந்து விழுக்காடுதான் வரலாம். ஆனால் குறிப்பிட்ட தலைப்பின் கீழ் இணையங்களில் தான்திரட்டிய தொகுப்புகளை ஒருவன் படிக்கும்போது ஐம்பது விழுக்காடு தவறான புரிதல் ஏற்படுகிறது. அது அவரின் அறிவு – சிந்தனை திறனைப் பொறுத்தது.

உதாரணதிற்கு ஒன்றை பார்ப்போம், “எனக்குப் பிறகு சில தலைவர்கள் தோன்றுவார்கள்”…., என்ற ஹதீஸை எடுத்துக்கொள்வோம் இதில் சொல்லப்பட்ட “தலைவர்கள்” யார் என்று அதைப்பற்றிய எல்லா ஹதீசையும் அதன் நம்பகமான விளக்க உரையோடு பார்த்தோமானால் தெரியும் அது ஆட்சித் தலைவர் என்று. அல்லாஹுவின் தூதர் (ஸல்) சொன்னது நாட்டின் ஆட்சித் தலைவரைத்தான். ஆனால் அண்ட்ராய்டு ஆய்வாளர்கள் இந்த ஹதீசை “ஜமாஅத்து தலைவர்” “இயக்கத் தலைவர்” “சங்கத்தின் தலைவர்” “பள்ளிவாசல் முத்தவல்லி” போன்றோருக்கு பொருத்தியதோடு இல்லாமல் “ஒரு முஸ்லிம் சக முஸ்லிம் சகோதரனை எதிர்த்து நிற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தந்த அளவுகோல்” என்று தவறான தலைப்பும் இடுவார். இதுபோன்றுதான் பல நபிமொழிகள் தவறாக விளங்கப்படுகின்றன
.
அண்ட்ராய்டு ஆய்வாளர்களின் தவறான புரிதலுக்கு இன்னொரு காரணமும் உண்டு! குறிப்பாக அண்ட்ராய்டு தொலைபேசியில் உள்ள தமிழ் குர்ஆன், மற்றும் ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹுல் முஸ்லிம் போன்ற கிரந்தங்களுக்கு விளக்கவுரை இல்லாமல் ஹதீஸ்கள் மட்டும்தான் அதில் உள்ளது.

குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் உள்ள (தஃப்ஸீர்கள்) விரிவுரைகள், நம்பகமான ஆசிரியர்கள் இல்லாமல் சுயமாக விளங்க முற்படும்போதுதான் தவறான புரிதல் அதிகம் ஏற்படுகின்றன. இந்த அண்ட்ராய்டு ஆய்வாளர்கள் நம்பகமான ஆசிரியர்களிடம் சென்று சரியான கல்வியை கற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

எது எப்படியோ “மடையர்களை தங்களுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுக்கும் தலைவர்களாக மக்கள் ஆக்கிக் கொள்வதற்கு இந்த “அண்ட்ராய்டு எந்திரம்” பெரிதும் உதவியாக இருக்கின்றது.
-Sulthan seaport
Jeddah.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top