Mohamed Farook Mohamed Farook Author
Title: காஷ்மீரில் 68 ஆயிரம் மக்களை கொன்ற நாடு ஜனநாயக நாடா? – அருந்ததி ராய் ஆவேசம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சுதந்திரம் தான் ஒரே வழி என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளருமான அரு...
சுதந்திரம் தான் ஒரே வழி என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றினார்.

அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக காஷ்மீரிகளின் மூத்த தலைவரான சையத் அலிஷா கிலானி மீது வெறியர்கள் சிலர் காலணி வீசி ரகளை செய்தனர். அதனை முன்னதாக குறிப்பிட்ட அருந்ததி ராய், என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுதே எறிந்து கொள்ளுங்கள் எனக் கூறியவாறு தனது உரையைத் தொடங்கினார். காஷ்மீரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இடத்தை இந்திய காலனி ஆதிக்கம் பிடித்துக் கொண்டது. காஷ்மீர், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி அல்ல.

காஷ்மீர் ஒருபிரச்சனைக்குரிய பகுதி தான் என்பதை ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. 68 ஆயிரம் கஷ்மீரிகளைக் கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாயக நாடு என்று கூற உரிமையில்லை. குஜராத்தில் 2500 முஸ்லிம்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுகூற தகுதியில்லை.

வல்லமை மிகுந்த இந்திய ராணுவத்தினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும் கஷ்மீர் இளைஞர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பார்த்து ராயல் சல்யூட் செய்யாமலிருக்க முடியவில்லை என அருந்ததிராய் நிகழ்த்திய உரை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- webdunia
https://www.facebook.com/websitenewsexpress/

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top