"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
27/7/16

''உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள்.'' உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு.
 
இது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்....

பகுதி ஆறு:    
உங்கள் கல்வி:  
1. உங்கள் தற்போதைய தகுதிகள் எவை?

2. அவை உங்களுக்கு திருப்தியைத் தருகின்றனவா?

3. இல்லையென்றால், எந்த அளவு கல்வியை அடைய விரும்புகிறீர்கள்?

4. உங்கள் கல்வித்தகுதியை மேம்படுத்த என்னென்ன ஹலாலான வழிகள் (வட்டியில்லாக் கடன்) உள்ளன?

5. மாணவராக இருந்தால், உங்கள் கல்வி உங்களை அல்லாஹ்விடம் நெருக்கமாகக் கொண்டு செல்லுமா?

6. எவ்விதத்தில் உங்கள் கல்வி முஸ்லிம்களுக்கும், பொதுவாக சமுதாயத்திற்கும் உபயோகமாக இருக்கும்?

7. உற்சாகத்தோடும், முழு ஈடுபாட்டோடும் படித்திருக்கிறீர்களா?

8. உங்கள் கல்வித் தகுதியை முன்னேற்ற, எதாவது கூடுதலான திட்டங்கள் அல்லது வகுப்புகளில் சேர வேண்டுமா? (மேற்கண்ட கல்வியை உலகக் கல்வி மார்க்க கல்வி என்று பிரிக்க வேண்டாம். இரண்டும் கல்வி தான்).

????????????????????????????

- சகோதரர் ஜலாலுத்தீன்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.