"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
30/7/16

ஒட்டு மொத்த இந்தியாவில் கைப்பேசி வசதி இல்லாத 55 ஆயிரம் கிராமங்களில் உடனடியாக கைப்பேசி சேவையை துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டில் உள்ள 5.97 லட்சம் கிராமங்களில் 5.41 லட்சம் கிராமங்களுக்கு தற்போது கைப்பேசி சேவை வசதி உள்ளது. எனினும், இன்னும் 55,669 கிராமங்களில் கைப்பேசி சேவை வசதியே இல்லாமல் உள்ளது.

இந்நிலையில், விரைவில் இந்த கிராமங்களில் மொபைல் கவரேஜை ஏற்படுத்தி அங்கு கைப்பேசி சேவைகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை தகவல்தொடர்பு துறை இணை மந்திரி மனோஜ் சின்ஹா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கைப்பேசி சேவை வசதி இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை மாநிலங்கள் வாரியாக,
  • ஒடீசா - 10,398 கிராமங்கள்
  • ஜார்கண்ட் - 5,949 கிராமங்கள்
  • மத்திய பிரதேசம் - 5,926 கிராமங்கள்
  • மகாராஷ்டிரா - 4,792 கிராமங்கள்
  • சத்தீஸ்கர் - 4,041 கிராமங்கள்
  • ஆந்திர பிரதேசம் - 3,812 கிராமங்கள்
  • அருணாச்சல பிரதேசம் - 2,886 கிராமங்கள்
  • அசாம் - 2,885 கிராமங்கள்
  • பீகார் - 2,534 கிராமங்கள்
ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் 4,752 கிராமங்களிலும், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் 2,138 கிராமங்களிலும் கைப்பேசி சேவையை மத்திய அரசு விரிவுபடுத்தி வருவது நினைவு கூரத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.