குளிர்சாதன பெட்டி வெடித்ததில் விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3
பேர் பலியானார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில்
கூறப்பட்டதாவது:–
பிணமாக கிடந்தனர்
திருவனந்தபுரம் மாவட்டம் தனுவச்சபுரத்தை சேர்ந்தவர் அனில்ராஜ் (வயது 40). இவருடைய மனைவி அருணா (35). இவர்களது மகள் அலீசா (4). இவர்கள் 3 பேரும் மணந்தலை அருகே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
கணவன்–மனைவி இருவரும் தனியார் என்ஜினீயரிங் ஒன்றில் வேலை செய்தும் வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை அனில்ராஜின் வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அனில்ராஜ் தரையிலும், மனைவியும், மகளும் கட்டிலிலும் பிணமாக கிடந்தனர்.
குளிர்சாதன பெட்டி வெடித்தது
போலீசார் நடத்திய சோதனையில் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குளிர்சாதன பெட்டி வெடித்ததும் அதில் இருந்து வெளியான விஷவாயு தாக்கி 3 பேரும் பலியாகி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக நகர கமிஷனர் ஸ்பர்ஜன் குமார், துணை கமிஷனர் சிவ விக்ரம், கழக்கூட்டம் துணை கமிஷனர் அனில் குமார் ஆகியோரின் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி வெடித்து இருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சோகம்
விஷவாயு தாக்கி பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விஷவாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.