காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: பிறந்து 2 மணி நேரத்தில் குழந்தையைத் தூக்கி எறிந்த தாய்!! பதை பதைப்கும் பதிவுகள்…
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சீனாவில், பிறந்து இரண்டு மணிநேரங்களேயான பச்சிளம் குழந்தையை, தூக்கி எறிந்த தாய் ஒருவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பொதி என்ற பகு...
சீனாவில், பிறந்து இரண்டு மணிநேரங்களேயான பச்சிளம் குழந்தையை, தூக்கி எறிந்த தாய் ஒருவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பொதி என்ற பகுதியில், சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கிடந்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட பொலிஸார், குறித்த பொதியினுள் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருப்பினும், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் விசாரணை நடத்தியதில் பெண் ஒருவர் குறித்த பொதியை கொண்டு சென்றதை சிலர் பார்த்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில், அந்த குழந்தையின் தந்தை யார் என தனக்கு தெரியாது எனவும், வருமானம் ஏதும் இல்லாததால் குழந்தையை கொன்றதாக குறித்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும் குழந்தை இறந்து பிறந்ததா அல்லது குழந்தையை உயிருடன் தூக்கி எறிந்தாரா என தெளிவான தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில், இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top