vkrnajur vkrnajur Author
Title: மோடியின் வாக்குவங்கி குறைந்தது; 2019-ல் வெற்றி பெற முடியாது: கெஜ்ரிவால் கருத்து!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பிரதமர் மோடிக்கு மக்களிடையே ஆதரவு குறைந்து வருகிறது, இதனால் 2019-ல் ஆட்சியைத் தக்கவைப்பது கடினம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளா...
பிரதமர் மோடிக்கு மக்களிடையே ஆதரவு குறைந்து வருகிறது, இதனால் 2019-ல் ஆட்சியைத் தக்கவைப்பது கடினம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால் கூறியதாவது:
பாஜக 2014 லோக்சபா தேர்தலில் 31% வாக்குகளை பெற்றது. இதில் 8-10% தீவிர இந்துத்துவ வாக்குகள், 7-8% வாக்குகள் இந்துவாதக் கொள்கைகளை முழுதும் நம்பும் தீவிர இந்துப் பிரிவினர். மற்றைய அனைவரும் குஜராத் மாதிரி வளர்ச்சியினால் முட்டாளாக்கப்பட்டவர்கள். அவர்கள் தாங்கள் மோடி அரசால் ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றனர்.
மோடி மாயையை இவர்கள் நம்பவில்லை. இத்தகைய காரணங்களினால் 31% வாக்கு வங்கி தற்போது 8% குறைந்து 21-22% வாக்குகளே பாஜக வசம் உள்ளதாக நான் நினைக்கிறேன். 2019-ல் அவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று நான் கருதவில்லை.
பிரதமராகும் விருப்பம் எனக்கில்லை, நான் எந்த ஒன்றாகவும் ஆக விரும்பவில்லை, டெல்லி முதல்வராக என்னை நிம்மதியாக பணியாற்ற விட்டால் போதுமானது.
பாஜக என்னென்ன வாக்குறுதிகள் அளித்ததோ அத்தகைய வாக்குறுதிகளிலிருந்து தானாகவே பின் வாங்குகின்றனர். ஒவ்வொன்றாக கைவிட்டு வருகின்றனர். மக்கள் அவர்களை நம்பத் தயாராக இல்லை, அவர்கள் பொய் கூறுகின்றனர் என்பதை மக்கள் இப்போது அறிந்துள்ளார்கள்.
பாரத மாதா கி ஜெய் சொல்லவில்லை எனில் அடிப்பார்கள். காஷ்மீரில் பாரத் மாதா கி ஜெய் என்று கூறினால் அடிப்பார்கள். மாட்டிறைச்சி சாப்பிட்டாலும் அடிப்பார்கள், சாப்பிடாவிட்டாலும் அடிப்பார்கள். பல்கலைக் கழகங்களை போர்மண்டலங்களாக ஆக்கி வைத்துள்ளனர். அவர்கள் நாட்டில் ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த முறை பாஜக-வை ஆதரித்த நல்ல மனிதர்கள் கூட தற்போது தாங்கள் தவறு செய்துவிட்டதாக வருந்துகின்றனர்.
எங்களை வலதுசாரிகளுடன் இணைக்கின்றனர், இது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. 2 ஆண்டுகளாக டெல்லியில் அரசை நடத்தி வருகிறோம். இன்னும் அவர்கள் கூறிய இந்த தொடர்பு உருவானதாகத் தெரியவில்லை. அப்படி வலதுசாரி தொடர்பு இருந்தால் நாங்கள் ஏன் மோடியை விமர்சிக்கப்போகிறோம். வலது சாரிகளையும் அவர்களது தலைவரையும் விமர்சிப்பதில் நாங்கள் வார்த்தைகளில் சிக்கனம் கடைபிடிப்பதில்லை. அவர்களது குண்டர்கள் போன்ற நடத்தையை விமர்சிக்கிறோம்.
இவ்வாறு கூறினார் கேஜ்ரிவால்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top