காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: இரவை பகல் போல் ஆக்கிய வி.களத்தூர் மக்கள்! TTPLயில் குவிந்த சிறுவர்கள்!!!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
நமதூர் மக்களுக்கு ரமலான் மாதம் வந்துவிட்டாலே போதும் அந்த மாதம் முழுவதும் மகிழ்ச்சி தான் பெருநாள் தான். பகலில் ஐவேளை தொழுவது இரவில் தராவீஹ...
https://1.bp.blogspot.com/-QUjtp66CGAQ/V27cA8JrScI/AAAAAAAAUmg/iad9VL_iKIgfdsZv24ObLt_5i0jhLfSfACLcB/s1600/IMG_20160626_004734.jpgநமதூர் மக்களுக்கு ரமலான் மாதம் வந்துவிட்டாலே போதும் அந்த மாதம் முழுவதும் மகிழ்ச்சி தான் பெருநாள் தான்.

பகலில் ஐவேளை தொழுவது இரவில் தராவீஹ் தொழுவது என மாதம் முழுவதும் சுமுகமாக நகரும்.

ரமலான் மாதம் வந்து விட்டால் போது வி.களத்தூரில் பெரியவர்களை விட இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தான் ரமலான் என்றால் உற்சாகம்.அந்த மாதம் இரவு முழுவதும் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியுடன் சில இடங்களில் பேசிக்கொண்டும், சில இடங்களில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டும் இருப்பர்கள்.

நேற்று வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் (ஐடியல் பள்ளி அருகில்) சஹர் விருந்து ஏற்பாடுகள் சில நல்ல உள்ளங்கள் வருடம் வருடம் ஒன்று சேர்ந்து சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.அதே போல் இந்த வருடமும் சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள். ஊரில் உள்ள அனைத்து சகோதரர்களுக்கும் இவ்விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை, சஹர் விருந்து என்பதால் நேற்று இரவு முழுவதும் வி.களத்தூர் கலகட்டியது.
 https://3.bp.blogspot.com/-Nqxsro8JzS0/V28RVCo35AI/AAAAAAAAUpo/IfDAbBa3Zo0qf13jTIbZ7xZ8YHzrmMtSwCLcB/s640/vkalathur%2B%252810%2529.jpg
ஒரு பக்கம் சஹர் விருந்து ஏற்பாடுகள் மற்றொரு பக்கம் நமதூர் அருகே உள்ள TTPLயில் குவிந்த அதிக சிறுவர்கள், தெருவுகளில் விளையாடிய சிறுவர்களும், இளைஞர்களும், பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் சில இடங்களில் பேசிக்கொண்டும், தெரு தெருவாக பைத் ஒதும்போது சிறுவர்கள் சிலர் அதனை பின்தொடர்ந்தும் டீ கடையில் சிலர் பேசிக்கொண்டும் வி.களத்தூர் நேற்று இரவு முழுவதும் பகல் போல் காட்சி அளித்தது. இதுபோல் பல விசயங்களை சொல்லிக்கொண்டே.. இன்று போல் என்றும் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுகிறேன்.

வெளிநாட்டில் இருக்கும் நம் சகோதரகளுக்காக ...இப்பதிவு

ஆக்கம் - முஹம்மது பாரூக்./ வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top