vkrnajur vkrnajur Author
Title: நோன்பு திறப்பதில் “கசகசா ” மூலமாக பாவத்தை சம்பாதிக்கின்றோமா?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
“கட்டாயம் படியுங்கள் பகிருங்கள்” “கசகசா” மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?  ★************★***********★*********** இலங்கை, இந்திய...
“கட்டாயம் படியுங்கள் பகிருங்கள்”
“கசகசா” மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?
 ★************★***********★***********
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் “கசகசா” என்ற பொருள்ஒரு போதைப் பொருளாகும். இதைப் பற்றிய விளக்கத்தைபார்ப்போம்.
கசகசா வை ஆங்கிலத்தில் Opium Poppy என்று சொல்லப்படும்.
இந்த பப்பி விதை எனப்படும் கசகசா என்பது பப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அதுமுழுவதுமாகக்காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்துஎடுக்கப்படுவதுதான் கசகசா.
ஆனால் பசுமை நிறத்தில் இருக்கும்போதுஅதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போதுஅந்த விதைப்பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம் என்றபோதைப்பொருள்.
இந்த கசகசாவை ஓராளவுக்கு மேல் சாப்பிட்டால் போதையை கொடுக்கும். இதனால்தான் துபாய், கத்தார்,குவைத், ஓமான், சவூதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியபோன்ற நாடுகளில் இந்த கசகசா போதைபொருள்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த நாடுகளுக்கு கசகசாவை கொண்டு சென்று பிடிப்பட்டால் சிறை தண்டனை நிச்சயம்.
கசகசா தொடர்பாக புதிய தலைமுறை என்ற தமிழக வாரப் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தியைபாருங்கள்.
சென்னையில் இருக்கும் போதை தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தந்த விளக்கம் :  ”வளைகுடா நாடுகளான சவூதிஅரேபியா,கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில்,கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப்பொருள்என்பது முழுக்க முழுக்க உண்மை!
இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும்ஒட்டுமொத்த சர்வதேசவிமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்குகசகசாவை கொண்டு செல்ல தடைவிதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது.
கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக ‘கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை’என்று கொட்டைஎழுத்துகளில்எழுதிவைக்கப்பட்டுள்ளது.
கசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம்கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்குதொடர்ந்தார்அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்தவழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச்சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர்இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ்டிஸைனர்; அசைவப் பிரியர்.அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும்எடுத்துப் போனார்.
அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட… எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல்ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர்.
கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்தியரூபாய் மதிப்பில் 60ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன.
இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியாசென்றார்கள். இவர்கள் ஹஜ்புனிதப்பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள்இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசாபாக்கெட்இருக்க… உடனடியாக 10 வருடசிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!
இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்தநந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி,அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்குநாட்டுசட்டங்களிலிருந்து காப்பாற்ற வழிகேட்டார்.
இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்தொடர்ந்தார்.
கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர்முன்னிலையில் வந்தது.
இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், ‘உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும்,துறைமுகங்களிலும்கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பைவைக்க வேண்டும். அது முக்கியமானஇந்தியமொழிகள் அனைத்திலும் இருக்கவேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவுஇட்டார்கள். நாங்களும்எங்களால் முடிந்தவரை வளைகுடா நாடுகளுக்குவேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றிஎச்சரிக்கிறோம்.
எல்லா வகையான போதைப் பொருட்களும்இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “பித்உ’ (தேனிலிருந்து தயாரிக்கப்படும் மது)பற்றிக்கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டதாகும்” என்றுபதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் :புகாரி (5585) நபி (ஸல்) அவர்கள் என்னை யமன்நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள்குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று)நான்அவர்களிடம் விசாரித்தேன். அதற்குஅவர்கள் “அவை யாவை?” என்று கேட்டார்கள். நான் “அல் பித்உ, அல்மிஸ்ர்’ என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது)ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி), நூல் :புகாரி (4343) கசகசா என்பது அதிகம் சாப்பிட்டால்தானேபோதை வருகிறது. நாம் குறைவாகத்தானே பயன்படுத்துகிறோம் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழிகவனிக்கட்டும்.
அதிகமா (உண்டால்) போதை தரக்கூடியதில்  குறைவானதும் ஹராமாகும் என்று நபி (ஸல்)அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : திர்மிதீ(1788) எனவே உணவுகளில் கசகசா வை சேர்த்துப்பயன்படுத்துவதையும், கசகசா சேர்க்கப்பட்ட உணவுகளையும் கண்டிப்பாகநாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்என்பதேமார்கத்தின் தெளிவான தீர்ப்பாகும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top