காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஒய்.ஜி.மகேந்திரன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சுவாதி கொலை குறித்த தனது கருத்துக்கு மன்னிப்புக்கோரிய பிறகும் அவருக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் ஓயாததால், அவரது...
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சுவாதி கொலை குறித்த தனது கருத்துக்கு மன்னிப்புக்கோரிய பிறகும் அவருக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் ஓயாததால், அவரது வீட்டுக்கு காவல்துறையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில், சுவாதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு பதிவை எழுதியிருந்திருந்தார்.

இறந்த பெண் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் அமைதி காக்கிறார்கள் என்றும் ஒரு தலித் பெண் இறந்திருந்தால் அனைவரும் வரிந்துகட்டிக்கொண்டு வந்திருப்பார்கள் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கருத்து பலத்த எதிர்ப்பு எழுந்ததால், தனது கருத்துக்கு விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இருப்பினும் அவருக்கு கண்டனங்கள் தொடர்வதால், அவரது வீட்டுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top