Mohamed Farook Mohamed Farook Author
Title: குண்டாக இருந்தால் அனுமதி இல்லை: நிர்வாண ஹொட்டலின் கடுமையான விதிகள் இதுதான்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஜப்பானின் முதல் நிர்வாண ஹொட்டல் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது. முன்னதாக அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலும், லண்ட...
ஜப்பானின் முதல் நிர்வாண ஹொட்டல் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது.
முன்னதாக அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலும், லண்டனிலும் நிர்வாண ஹொட்டல் திறக்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜப்பானின் முதல் நிர்வாண ஹொட்டல் தலைநகர் டோக்கியோவில் யூலை 29ம் திகதி திறக்கப்படுகிறது. இதற்கான கடுமையான விதிமுறைகளை ஹொட்டல் நிர்வாகம் தயார் செய்துள்ளது.

ஹொட்டலின் இணையதள தகவல் படி, 18 முதல் 60 வயதுக்குட்பட்டோரை மட்டுமே அனுமதிக்க முடியும். உடல் எடை அதிகமாக இருப்போர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதாவது உயரம் மற்றும் எடையின் சராசரியில் கூடுதலாக 15 கிலோ இருப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.
ஹொட்டலின் உள்ளே நுழைந்த பிறகு உடைகளை அவிழ்த்து ஒரு பையில் போட்டுவிட வேண்டும், ஹொட்டலில் கொடுக்கப்படும் உள்ளாடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

ஹொட்டலுக்கான வருகை ஆன்லைனில் முன்னதாக உறுதி செய்யப்பட்டு கட்டணத்தை செலுத்தி இருக்க வேண்டும்.
ஹொட்டலுக்கு வரும் மற்ற வாடிக்கையாளர்களுடன் பேசவோ, அவர்களை தொடவோ கூடாது. தொந்தரவு கொடுப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
மொபைல் போன், கமெரா என கொண்டு வந்திருக்கும் பொருட்களை கொடுக்கப்பட்டிருக்கும் லாக்கரில் வைத்து பூட்டி விட வேண்டும். டாட்டூ குத்திக்கொண்டவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுக்கோப்பான உடல்வாகு கொண்ட ஆண்கள் உள்ளாடையுடன் உணவு பரிமாற 750 டொலர்கள் வசூலிப்படுகிறது. தவிர, நடன நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் தனித்தனியாக பணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் அழிய ஆரம்பித்துவிட்டது. இறைவனை அஞ்சிக்கொள்ளூங்கள்...

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top