Mohamed Farook Mohamed Farook Author
Title: நீங்கள் தான் சிறந்த தந்தை: காட்டில் தனியாக விடப்பட்ட சிறுவன் உருக்கம்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஜப்பான் காட்டில்த னியாக விடப்பட்ட சிறுவன் YamatoTanooka, தனது தந்தையை மன்னித்துவிட்டதாக கூறியுள்ளார். ஜப்பானில் கடந்த மே மாதம் 28ம் திக...
ஜப்பான் காட்டில்த னியாக விடப்பட்ட சிறுவன் YamatoTanooka, தனது தந்தையை மன்னித்துவிட்டதாக கூறியுள்ளார்.
ஜப்பானில் கடந்த மே மாதம் 28ம் திகதி குறும்புத்தனம் செய்த மகனை திருத்துவதற்காக கொடூர விலங்குகள் இருந்த காட்டில்பெ ற்றோர் விட்டு விட்டு சென்றுள்ளனர்.

சுமார் 5 நிமிடங்கள் கழித்து வந்து பார்த்த போது, மகனை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.

பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதுடன், ஆறு நாட்கள் கழித்து உயிருடன் மீட்டனர்.
பெற்றோர் விட்டு சென்ற இடத்திலிருந்து 5.5 கி.மீ தொலைவில் ராணுவ சோதனை சாவடி அமைந்துள்ள பாழடைந்த கட்டிடத்திலிருந்து மீட்கப்பட்டான்.
கை மற்றும் கால்களில்சி று சிராய்ப்புகளுடன் மிகவும் சோர்வான நிலையில் மீட்கப்பட்ட சிறுவன், தற்போது மருத்துவ சிகிச்சைக்கு பிறகு நலமுடன் இருக்கிறான்.

இந்நிலையில் இவனது தந்தை சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது மகனிடம் உனக்கு வாழ்வின் மிக கடினமான நாட்களை தந்துவிட்டேன், என்னை மன்னித்து விடு என்று கூறியுள்ளார்.

இதனை கேட்ட Yamato Tanooka, நீங்கள் தான் மிகச்சிறந்த தந்தை, நான் உங்களை மன்னித்துவிட்டேன் என கூலாக பதிலளித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆன சிறுவன், தான் நலமாக இருப்பதாகவும், விரைவில் பள்ளிக்கு சென்று விளையாட்டு நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இவனது பெற்றோர் மீது எவ்வித வழக்கும் பொலிசார் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top