vkrnajur vkrnajur Author
Title: பிரபல கம்பெனிகளின் லோகோ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் அன்றாடம் வீடுகளில், டிவியில், தெருக்களில் ப...
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் அன்றாடம் வீடுகளில், டிவியில், தெருக்களில் பிரபல கம்பெனிகளின் லோகோக்களை பார்த்திருப்பீர்கள். அவர்களின் லோலோக்கள் மிக பிரபலமான பிராண்ட் என்பதன் அடையாளம் என்பது மட்டுமல்ல, அதற்குள் ஒரு அர்தத்தை வைத்துதான் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் லோலோக்களின் பின்னால் உள்ள அர்த்தங்களை தற்போது பார்க்கலாம்.
மெக்டொனால்டு(The golden mammaries)
மெக்டொனால்டு நிறுவனத்தின் லோகோ அதன் முதல் எழுத்தான ‘m’ என்று நினைத்தால் அது தவறு. உண்மையாக அந்த தங்க நிறத்தில் உள்ள m என்ற எழுத்திற்கு ஊட்டமளிக்கும் ஒரு ஜோடி மார்பகங்கள் என்று அர்த்தமாம்.
பெப்சி (Pepsi: The smiling Globe)
பெப்சி லோகோ 1940ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் சமயத்தில் உருவாக்கப்பட்டது. அப்போது அயல்நாடுகளில் உள்ள படைகளுக்கும் ஆதரவாக இருக்கும் என்பதை குறிக்கும் வகையில் சிகப்பு, வெள்ளை, நீல நிறங்களில் அந்த லோகோ உருவாக்கப்பட்துடன், இவை பாட்டிலின் மூடியில் மட்டும் இருக்குமாம்.
ஆடி (Audi: ‘The power of four’)
ஆடி கார் நிறுவனம் தனது நான்கு நிறுவனங்களான DKW, Horch, Wanderer, and Audi ஆகிவற்றின் பொருள்படும்படி, நான்கு வளையங்கள் ஒன்றோடு ஒன்று இருப்பது போன்ற லோகோவை உருவாக்கியது
ஐபிஎம் (IBM: Yup, we are all equal)
ஐபிஎம் நிறுவனத்தின் லோகோ அனைவரும் சமம் என்பதை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கூகுள் (google)
கூகுள் நிறுவனத்தின் லோகோ எப்படி என்பது குறித்து சிறுவயது நினைவுகளை ஞாபகம் செய்து பாருங்கள், நான்கு primary colors வரிசையை secondary colorகளை கொண்டு உடைத்து உருவாக்கப்பட்டது தான் கூகுளின் லோகோ.
வோல்க்ஸ்வேகன் (Volkswagon)
Volks என்பது ஜெர்மனி மக்களையும், wagon என்பது கார் என்பதையும் குறிக்கும். மக்களுக்கான கார் என்பது அதன் அர்த்தமாம்.
அமேசான் (Amazon: Everything from A to Z)
ஆங்கில எழுத்தான a வையும் கடைசி எழுத்தான z என்பதையும் உள்ளடக்கி அனைத்தும் கிடைக்கும் என்பதை குறிக்கும் வகையில் அமேசான் லோலோக உருவாக்கப்பட்டது
அடிடாஸ் (adidas
உங்கள் வாழ்வின் சிறந்த மலையேற்ற பயணம் குறித்து கற்பனை செய்து பாருங்கள் என்பதை குறிக்கும் வகையில் அடிடாஸ் லோகோ 3 படிகளை கொண்டதாக உருவாக்கியுள்ளனர்.
டோயோட்டா (toyota -The heart of hidden symbols)
மறைக்கப்பட்ட குறியீடுகளின் அடையாளம் அல்லது இதயம் என்பதை குறிக்கும் வகையில் toyotta லோகோ உருவாக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் (An apple isn’t just an apple!)
‘அறிவு மரத்தின் கனி’ ஆப்பிள் என்பதை குறிக்கும் வகையில் ஆப்பிள் லேலோ உருவாக்கப்பட்டுள்ளதாம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top