Mohamed Farook Mohamed Farook Author
Title: "அப்பா வயதை தப்பாக சொன்ன மகன்" - சத்தம் போட்டு சிரித்த ஜெயலலிதா
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதியின் வயதை அவரது மகனும், எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின் தப்பாக குறிப்பிட்டார். அதைக் கேட்டு முத...
தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதியின் வயதை அவரது மகனும், எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின் தப்பாக குறிப்பிட்டார். அதைக் கேட்டு முதல்வர் ஜெயலலிதா கொஞ்சம் சத்தமாகவே சிரித்தேவிட்டார்.
 
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவி ஏற்பு நிகழ்ச்சி  நேற்று நடைபெற்றது. இதனால், சபாநாயகரை அவரது இருக்கையில் அமரச்செய்யும் வாய்ப்பு, திமுக சட்டமன்ற  கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்தது.
 
திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியின் 63ஆவது பிறந்த தினம் என்று சொன்னார். அப்போது நேர்எதிரில் இருந்த முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதியின் வயதைக் கேட்டதும் கொஞ்சம் பலமாகவே சிரித்துவிட்டார்.
 
பேச்சை முடித்துவிட்டு உட்கார்ந்த மு.க.ஸ்டாலினிடம் இது பற்றி திமுக எம்எல்ஏக்கள் எடுத்து சொல்லவே மீண்டும் எழுந்து சபாநாயகரின் அனுமதியைப் பெற்று கருணாநிதியின் வயதை 93 என்று பதிவு செய்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top