vkrnajur vkrnajur Author
Title: ஆண்டு முழுவதும் உம்ரா செய்ய அனுமதி வழங்க திட்டம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அடுத்த ஆண்டில் உம்றா வழிபாட்டு காலத்தை ஆண்டு முழுவதும் திறந்து வைக்க சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்றா அமைச்சு திட்டமிட்டிருப்பதாக அந்த அமைச...
அடுத்த ஆண்டில் உம்றா வழிபாட்டு காலத்தை ஆண்டு முழுவதும் திறந்து வைக்க சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்றா அமைச்சு திட்டமிட்டிருப்பதாக அந்த அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
“ஹஜ் பருவத்தை தவிர்த்து ஆண்டு முழுவதும் உம்றா கடமைக்கு விசா வழங்கப்படவுள்ளது” என்று மக்கா வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனத்தின் ஹஜ் மற்றும் உம்றாவுக்கான தேசிய குழுவின் தலைவர் அப்துல்லாஹ் காதி குறிப்பிட்டுள்ளார்.
ரமழான் 15 (ஜுன் 20) தொடக்கம் உம்றா விசா விநியோகிப்பதை அமைச்சு நிறுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். எனினும் வெளிநாடுகளில் இருக்கும் சவூதி இராஜதந்திர அலுவலகங்கள், ஏற்கனவே விசா குறிப்பு எண்கள் வழங்கப்பட்டோர்களுக்கு விசா அனுமதி வழங்கி வருவதாக குறிப்பிட்டாா்.
தரவுகளின்படி கடந்த ஆண்டு எட்டப்பட்ட 6.4 மில்லியனை விடவும் இந்த ஆண்டில் உம்றா விசா ஏழு வீதம் உயர்ந்துள்ளது. “இந்த ஆண்டில் அமைச்சு திட்டமிட்டிருக்கும் எட்டு மில்லியன் உம்றா யாத்திரிகர்களின் எண்ணிக்கையை விடவும் இது குறைவானது” என்று காதி தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top