Mohamed Farook Mohamed Farook Author
Title: கண்ணீர் சிந்தும் மனைவியரும்... தட்டுத் தடுமாறும் கணவன்மார்களும்!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கணவன்- மனைவி இடையே சண்டை நடந்தால் கண்ணை கசக்கி கொண்டு மூக்கை சிந்தும் மனைவிமார்களை பார்த்து எரிச்சல்படும் கணவன்களுக்கு மத்தியில் அதனை ர...
கணவன்- மனைவி இடையே சண்டை நடந்தால் கண்ணை கசக்கி கொண்டு மூக்கை சிந்தும் மனைவிமார்களை பார்த்து எரிச்சல்படும் கணவன்களுக்கு மத்தியில் அதனை ரசிக்கும் கணவன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பல வீடுகளில், கணவனோடு மல்லுக் கட்டிக்கொண்டு, சரிசமமாக வார்த்தைகளை பயன்படுத்தி சண்டையிடும் மனைவியரும் இருப்பார்கள், சில வீடுகளில் செல்ல சினுங்கள் மூலம் தனக்கு வேண்டியதை சாதிக்கும் மனைவியரும் இருப்பார்கள்.

பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுகிறார்கள் என்பது ஆண்கள் பொதுவாக வைக்கும் புகாராகவும் உள்ளது. சில இடங்களில் விதி விலக்காக பெண்களால் ஆண்கள் அழுகிற சம்பவங்களும் நடைபெறுகிறது.
மனைவியர் அழுதால் கணவன்கள் என்ன செய்வார்கள்?
  • ஒரு சிலருக்கு தங்கள் மனைவி அழுவதைப் பார்த்தாலே கோபம் இன்னும் சற்று அதிகரித்து, மனைவியை வெளுத்து வாங்கி விடுவார்கள், உச்சக்கட்ட எரிச்சலுக்கு ஆளாகும் அவர்கள் கையில் கிடைப்பவற்றை தூக்கி எறிவார்கள்.
  • சிலருக்கு, கையும் ஓடுவதில்லை, காலும் ஓடுவதில்லை, எப்படி இந்த அழுகையை சமாளித்து சமாதானப்படுத்துவது என்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது. சமாதானப்படுத்த முயன்றால் அழுகை கூடிவிடுமோ, என நினைத்து அந்த நேரத்தில் மௌனம் சாதித்து, வீட்டின் பின்பக்கமாக சென்றுவிட்டு, சில மணி நேரத்திற்கு பிறகு திரும்பி வந்து சமாதானம் செய்வார்கள்.
  • பொது இடங்களுக்கு கடைக்கு செல்லும்போது, தான் கேட்டதை அல்லது விரும்பியதை வாங்கித் தராமல் போகும் கணவன்களிடம், காரியம் சாதிக்க மனைவி பொது இடம் என்றும் பாராமல் கண்களை கசக்குவார். இந்த இடத்தில் பெரும் தர்மசங்கடத்திறகு ஆளாகிவிடுகிறார்கள். ஏனெனில் வீட்டிற்குள் எப்படியோ பொது இடத்தில் தான் ஒரு ஜென்டில்மேனாக நடந்து கொள்ளத்தான் ஒவ்வொரு ஆணும் விரும்புவார்கள்.
  • சில பெண்கள் சாதாரண பிரச்சனைகளைக் கூட பெரிய அளவிற்கு பில்டப் செய்து சீன் கிரியேட் செய்துவிடுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் ஆண்களை உச்சகட்ட கோபத்திற்கு ஆளாக்குகிறது, சிறு விடயத்தால் வீட்டையே பிரலயமாக்கிவிடும் மனைவியரால், ஆண்கள் தாங்கள் செய்ய வேண்டிய செயல்களில் சிறிது தடுமாறி விடுகிறார்கள்.
மொத்தத்தில் நேர்மையாக, நேருக்கு நேர், தைரியமாக, தெளிவாக பேசி கேட்கும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். மற்றபடி கண்ணீர் விட்டுகாரியம் சாதிக்க நினைக்கும் பெண்களை ஆரம்பத்தில் ரசித்தாலும், நாளடைவில் வெறுப்பு தான் மிஞ்சுகிறது. 

எனவே மனைவிமார்களே எதற்காக அழ வேண்டுமோ அதற்காக மட்டும் அழுங்கள், இரண்டு சொட்டு கண்ணீர் வடித்து, உங்கள் இருவரின் வாழ்க்கையையும் சீர்குலைக்காமல் இல்லறத்தை நல்லறமாய் நடத்துங்கள்.... 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top