Mohamed Farook Mohamed Farook Author
Title: ஜனாதிபதி உமர் ( ரலி) அவர்களின் அரசியல் நேர்மை…..
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
உமர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக பதவியில் இருந்த போது , நோய்வாய்ப்பட்டார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை ...
உமர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக பதவியில் இருந்த போது , நோய்வாய்ப்பட்டார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள்.

அந்நாட்டின் அதிபரான உமர் (ரலி ) அவர்கள் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. மதியம் வேளை தொழுகைக்காக பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது உமர் அவர்கள் எழுந்து நின்று மக்களை நோக்கி, “எனக்கு ஒரு வியாதி இருக்கிறது.அதற்கு மருத்துவர் தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். 

அரசாங்க பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி தேன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவா?” என அனுமதி கேட்கிறார்.

மக்கள் அனைவரும் “இதற்கெல்லாம் போய் அனுமதி கேட்க வேண்டுமா? தராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று சொன்னார்கள்.
அதற்கு உமர், அவர்கள் “இல்லை (அரசாங்கத்தின்) மக்களின் சொத்தை மக்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை” என்று கூறிவிட்டு, அந்த தேனை சாப்பிட்டு நோயை குணப்படுத்தினார்.
இன்று இது போன்ற ” இது போன்ற அரசியல் நேர்மையை ” பார்ப்பது அரிதாகிவிட்டது.
- Engr.Sulthan

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top