Mohamed Farook Mohamed Farook Author
Title: துபாய் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆளில்லா விமானம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென்று தோன்றிய ஆளில்லா விமானத்தினால் பரபரப்பு நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக ...

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென்று தோன்றிய ஆளில்லா விமானத்தினால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக துபாய் விமான நிலைய வான் எல்லை அவசரமாக மூடப்பட்டது.
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் வான்வெளியில் நேற்று காலை திடீரென்று தோன்றிய ஆளில்லா விமானத்தால், அந்தப் பகுதி வான் எல்லை அவசரமாக மூடப்பட்டது.

காலை 11.36 மணியில் இருந்து 12.45 மணிவரை அங்கிருந்து விமானங்கள் புறப்பட்டு செல்லவோ, தரையிறங்கவோ அனுமதிக்கப்படவில்லை. இதனால் 22 விமானங்கள் துபாய் சென்ட்ரல் விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக துபாய் விமான நிலைய தலைமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேட்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் வரையிலான பகுதிகளில் இதுபோன்ற ஆளில்லா விமானங்களை பறக்க விடுவது சட்டபுறம்பான செயல் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top