காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: இஸ்லாத்தை கொச்சைப்படுத்த நினைக்கும் புதிய தலைமுறை!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
...

உலகில் பெண்களின் பாதுகாப்பு இல்லாத நாடுகள் என்று 10 அபாயகரமான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது புதிய தலைமுறை, அதில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தானையும், மூன்றாம் இடத்தில் இந்தியாவையும் கூறியுள்ளது.
 

10 நாடுகளின் பட்டியலில் இந்தியா, நான்கு முஸ்லிம் நாடுகள், நான்கு கிறித்தவ நாடுகள், ஒரு பௌத்த நாட்டையும் கூறியுள்ளது.
இவ்வாறு வெளியிட்டுள்ள இந்த செய்தியில் முஸ்லிம் பெண்கள் கதறுவதை போன்ற படத்தை முகப்பு படமாக வைத்து செய்தி வெளியிட்டு முஸ்லிம் விரோத போக்கை வெளிப்படுத்தியுள்ளது புதிய தலைமுறை.

இந்தியாவில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நேற்றும் நேற்று முந்தினம் கடைசி 24 மணி நேரத்தில் 6 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பெண்கள் கற்பழிப்பு, பாலியல் தொந்தரவுகள், பெண் சிசு கொலை, ஜாதிய காதலால் ஆணவக்கொலை, வரதட்சணை மற்றும் வரதட்சணை படுகொலை, ஒரு தலை காதலால் பெண்களின் முகத்தில் ஆசிட் வீச்சு, ஈவிடீசிங் என்று பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயகராமான நாடாக இந்தியா திகழ்வதாக உலகளாவிய அளவில் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் கூறியுள்ள நிலையில்…

முஸ்லிம் நாடுகளில் பெண்கள் கற்பழிப்பு ஏனைய நாடுகளை விட 95 சதவீதம் குறைவு, வரதட்சணை கிடையாது, வரதட்சணை படுகொலை கிடையாது, பெண் சிசு கொலை கிடையாது, ஆசிட் வீச்சு கிடையாது, புர்கா அணிவதால் பெண்களின் கழுத்திலுள்ள செயின் பறிப்பு கிடையாது, ஈவிடீசிங் கிடையாது, அழகி போட்டி என்று காமக்கூத்துக்கள் கிடையாது.

திருமண அனுமதி, விவாகரத்து உரிமை, மறுமண அனுமதி, சொத்துரிமை ஒருபுறம்…

அரசு அலுவலகம் முதல் தனியார் நிறுவனம் வரை பெண்களுக்கு தனி பகுதி, தனி மரியாதை, தனி கௌரவம் என்று பெண்களை கண்ணியப்படுத்தும் முஸ்லிம் நாடுகளை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இஸ்லாத்தை கொச்சைப்படுத்த நினைப்பது புதிய தலைமுறையின் தரத்திற்கு உகந்தது அல்ல…

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top